- தமிழ்நாடு
- இந்தியா
- உலகம்
- அரசியல்
- நூல் அறிமுகம்
- சினிமா
- தமிழ்
- தொடர்கள்
- நலவாழ்வு
- உணவு
- வரலாறு
- வினோதங்கள்
- Public Post
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: Admin
நடிகர் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்திற்கான சிறப்பு எமோஜியை டிவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் ஜகமே தந்திரம். வரும் ஜூன் 18-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் இணையதளத்தில் இப்படம் வெளியாக உள்ள நிலையில் சில தினங்களுக்கு முன் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஜகமே தந்திரம் படத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் ட்விட்டர் நிறுவனம் சிறப்பு எமோஜியை வெளியிட்டுள்ளது. மீசை, கூலிங் கிளாஸ் உடன் இருக்கும் அந்த எமோஜியை தனுஷ் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். கடைசியாக நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்திற்கு ட்விட்டர் நிறுவனம் சிறப்பு எமோஜியை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் ஒரேநாளில் 28,897 பேருக்கு கொரோனா தொற்று – 236 பேர் உயிரிழப்பு தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,80,259 ஆக உயர்வு – மொத்த உயிரிழப்பு 15,648 ஆக உயர்வு தமிழகத்தில் கொரோனாவால் ஒரேநாளில் 236 பேர் உயிரிழப்பு
ராதாரவி மீது நடவடிக்கை எடுத்த ஸ்டாலின் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? – அன்புமணி கேள்வி அன்புமணி ராமதாஸ் இன்றும் தனது பிரசாரத்தில் ஆ.ராசா சர்ச்சை குறித்த கேள்விகளை எழுப்பினார். பாமக மாநில இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாகப் பிரசாரம் மேற்கொண்ட அவர் தனது பிரசாரத்தில் முதல்வரின் தாயை ஆ.ராசா விமர்சித்ததாக எழுந்த சர்ச்சை குறித்து பேசினார். அப்போது, முன்னர் திமுகவில் இருந்த நடிகர் ராதாரவி நடிகை நயன்தாராவை அவதூறாகப் பேசிய போது அவர் மீது கட்சி ரீதியில் நடவடிக்கை எடுத்த ஸ்டாலின், சமீபத்தில் எடப்பாடி பழனிசாமியின் தாயாரை தரக் குறைவாக விமர்சித்த திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? – என்றும், திமுக கூட்டணியில் உள்ள தலைவர்கள் யாரும் ஆ.ராசாவை கண்டிக்காதது ஏன்?…
இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களில் 100க்கும் மேலான நாடுகளால் பயன்படுத்தப்படும் பொருள் – என்ற வகையிலும், இந்தியாவின் தேர்தலில் விதிகளை உறுதி செய்ய உதவும் ஒரு கருவி – என்ற வகையிலும் தேர்தல் மை வகிக்கும் இடம் மிக முக்கியமானது. இது கண்டுபிடிக்கப்பட்ட காரணமே சுவாரசியமானது. 1952ஆம் ஆண்டில் சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் நடைபெற்ற போது போலி வாக்காளர்களைக் கண்டறிய இந்தியத் தேர்தல் ஆணையம் பெரும்பாடு பட்டது. இந்தப் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் கண்டுபிடிக்க பல கட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும் தீர்வு கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த, இரண்டாவது பொதுத் தேர்தலிலிலும் போலி வாக்காளர்கள் பெரும் சிக்கலாக இருந்தனர். இந்நிலையில், தேசிய இயற்பியல் சோதனைக்கூடமான என்.பி.எல். (NPL – National Physical laboratory)லில் லண்டனைச் சேர்ந்த அறிவியலாளர் எம்.எல்.கோயல் தலைமையிலான குழுவே இறுதியில் ‘தேர்தல் மை’யை ஒரு நிரந்தரத் தீர்வாகக் கண்டு பிடித்தனர். இந்தியாவின் மூன்றாவது பொதுத் தேர்தலில் இந்த…
நாடாளுமன்ற உறுப்பினரும் திமுகவின் மகளிரணி செயலாளருமான கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. நடைபெற உள்ள தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பரப்புரைப் பணிகளை அவர் மேற்கொண்டு வந்த நிலையில், அவர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளார். இதனால் அவர் மேற்கொண்டு பிரசாரம் செய்வது தடைபட்டு உள்ளது. மேலும் கடந்த சில தினங்களில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியை சந்தித்தவர்களும் கொரோனா சோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். கனிமொழிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ள செய்தியானது தமிழக அரசியல் களத்திலும், திமுகவிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நமது நிருபர்.
பிரியா வேலு உலக ஆட்டிச விழிப்புணர்வு நாள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ஆட்டிசம் என்பது தமிழில் மதி இறுக்கம் என்று அழைக்கப்படுகின்றது. மதியிறுக்கம் என்பது மூளையின் வளர்ச்சிக் குறைபாடு காரணமாக ஏற்படுகிறது. இது ஒரு குறைபாடு மட்டுமே நோயல்ல. இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களை எப்படி அனுசரித்து நடந்துக் கொள்ள வேண்டும் என்பதை பொது மக்களுக்கு உணர்த்தும் வகையில்தான் மதியிறுக்க விழிப்புணர்வு நாள் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது. மதியிறுக்கத்தின் வரலாற்றை நாம் பார்க்கப் போனால்… டாக்டர் லியோ கானர் என்பவர்தான் ஆட்டிசம் என வார்த்தையையே உலகுக்கு அறிமுகப்படுத்தியவர். அவர் 1943ல் “தனது பாசமான தொடர்பைச் சிதைக்கும் ஆட்டிசம் (Autistic Disturbances of Affective Contact)” என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டார். அதில்தான் முதன் முதலாக ஆட்டிச பாதிப்புடைய குழந்தைகளின் பிரச்னைகள் பேசப்பட்டன. 1965ல் டாக்டர் பெர்னார்ட் ரிம்லாண்ட் மற்றும் டாக்டர் ரூத் சல்லிவன் ஆகியோர் இந்தக் குறைபாடு குறித்த ஆய்வுகளுக்காக…
இந்திய திரைப்படத்துறையின் தந்தை எனப் போற்றப்படுபவர் தாதா சாகேப் பால்கே என்னும் துண்டிராஜ் கோவிந்து பால்கே. யார் இந்த பால்கே? ஏன் இவரை இந்தியத் திரைப்படத்துறையின் தந்தை என கூறுகிறார்கள்? எதற்காக இவர் பெயரில் விருது வழங்கப்படுகிறது? என்று பார்க்கலாம்… தாதாசாகேப் பால்கே 1870ல் நாசிக் அருகே உள்ள திரும்பகேஸ்வரில் பிறந்தார். பம்பாய் ஜே.ஜே. கலைக்கல்லூரியில் புகைப்படம் எடுக்கும் முறையையும், இயற்கை காட்சிகளைக் கொண்டு சித்திரம் தீட்டும் முறையையும் கற்றார். இந்தியாவுக்கு திரைப்படம் என்ற கலையே முழுதும் அறிமுகமாகாத காலகட்டத்தில், பால்கே தனது தீவிர முயற்சியால் ஒரு முழு நீளத் திரைப்படத்தை 1913ல் தயாரித்து இயக்கினார். அப்படியாக இவர் தயாரித்து இயக்கிய “ராஜா ஹரிச்சந்திரா” தான் இந்தியாவின் முதல் முழு நீள திரைப்படமாகும். அதற்கு முன்பு வெளிவந்த படங்கள் எல்லாம் முழுமையடையாத முயற்சிகளாக மட்டுமே இருந்தன. அன்றைய காலகட்டத்தில் திரைப்படம் எடுப்பது சுலபமான காரியம் இல்லை. நாடகங்களில் நடிக்கவே பெண்கள் பெரும்பாலும்…
தமிழில் விலங்குகளைக் குறிக்கும் சொற்களில் ஒன்று கால்நடை. இது பொதுவாக வீட்டு விலங்குகளான ஆடு, மாடுகளைக் குறிக்கப் பயன்படுகிறது. இந்த சொல்லைப் பயன்படுத்தும் சிலருக்கு ஒரு ஐயம் வரக் கூடும், ‘ஆடு மாடுகள் மட்டுமா காலால் நடக்கின்றன? மனிதனும் காலால்தானே நடக்கிறான்… மனிதனை ஏன் கால்நடை என்று சொல்வதில்லை?’ – என்று. இத்தனைக்கும் ஒருவர் நடந்து பயணம் செய்வதை ‘அவர் கால்நடையாக பயணித்தார்’ என்று சொல்வது உண்டு. ஆனால் ஏன் மனிதர்களைக் கால்நடைகள் பட்டியலில் சேர்ப்பது இல்லை?. இதற்கான விளக்கத்தை கிருபானந்த வாரியார் அவர்கள் ஒரு மேடையில் அளித்தார். அவரது விளக்கத்தின்படி, ஆடு, மாடுகளைப் போலவே மனிதனும் கால்நடையாக பயணிக்கக் கூடியவன். ஆனால் அவனுக்கு மேலும் இரண்டு வகையான நடைகள் உள்ளன. முதலாவது ‘நா நடை’ அதாவது பேச்சு நடை. இப்போதும் ஒருவர் பேசும்போது ‘உங்கள் நடை நன்றாக இருந்தது’ என்று பாராட்டப்படுவதைப் பார்க்கிறோம் அல்லவா, அந்த நடைதான் இது. இரண்டாவது…
கிராமத்துக்காரி – இது 90களின் உலகம். பகுதி 3: வேலு தாத்தா அபிநயா அருள்குமார் பகுதி 2 Link: கருத்த, ஒல்லியான தேகம், முறுக்கு மீசை, தலையில் முண்டாசு கூடவே அந்த வியர்வை வாசம்…எழுதும் போதும் மணக்குது எனக்கு..என் தாத்தன். ..வேலு ..ஊருக்கு வேலு அய்யா. அம்மாவின் அப்பா!. 8 வயது எனக்கு இருக்கும் அப்போது. “தாத்தோவ்” ” ஆயாலு”….எந்துச்சிட்டியா, ஓடியா…” முதல்நாள் இரவு பறித்து வந்த கோரைச் செடியைக் கொண்டு கூடை முடைந்து கொண்டிருந்தார் வேலு தாத்தா. நான் கண்ட கனவுகளை ,வெள்ளை நிறமாக வெளியுலகத்திற்கு காட்டிய அந்த உமிழ்நீர் கோட்டை அழித்துக்கொண்டே, “தாத்தா இது என்னா” ” கூட பின்னுறேன்” ”எதுக்கு?!” ”உன்ன இதுக்குள்ள போட்டு கவுக்க…” கேலியும் கிண்டலும் ஊரிப்போன மனிதன்…சிரிக்காமலே சிரிக்க வைப்பார்… இன்றைய வழக்கத்தில் சொல்லப்போனால் மனுசர் மரண கலாய் காலாய்ப்பார். “போயா கிழவா”.. ” ஹா ஹா….பல்ல விளக்கு ஓடு “ “இரு…
ஆண்களை அலறவிட்ட பக்கிங்ஹாம் அரண்மனை பகுதி 3: அல்லல்பட்ட அரசர்கள்இரா.மன்னர் மன்னன் பகுதி 2 Link: அரசர் நான்காம் வில்லியம்ஸ் பக்கிங்ஹாம் அரண்மனையில் குடியேறும் முன்பே இறந்துபோன நிலையில், 18ஆவது வயதில் மகாராணியாக முடிசூடிய விக்டோரியா பக்கிங்ஹாம் அரண்மனைக்கு இடம் மாறினார். பக்கிங்ஹாம் அரண்மனையில் மூன்றாம் ஜார்ஜ் அரசரின் மனைவி சார்லெட் வசித்தபோது எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. அதுபோல தனக்கும் எந்த பிரச்னைகளும் வராது என விக்டோரியா நம்பினார். ஆனால் அவரது நம்பிக்கைக்கும் மேலே பக்கிங்ஹாம் அரண்மனை அவருக்கு அள்ளிக் கொடுத்தது. பக்கிங்ஹாம் அரண்மனையில் கால் வைத்தது முதல் அடுத்த 63 ஆண்டுகள் 7 மாதங்களுக்கு அவர் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று ஆண்டார். உலக வரலாற்றில் ராணி விக்டோரியா ஆண்ட காலகட்டம் ‘விக்டோரியன் எரா’ என்றே அழைக்கப்படும் அளவுக்கு அவரது ஆட்சி உலகின் முக்கிய மையமாக இருந்தது. ஒரு கட்டத்தில் ஐரோப்பாவின் மிகப் பெரும்பாலான நாடுகளின் அரண்மனைகளின் மராராணி விக்டோரியாவின்…