Author: Admin

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடன் பொதுமக்கள் நேரடியாக புகார் அளிக்க cmcell.tn.gov.in என்ற தனிப்பிரிவு இணையதளம் தொடக்கபட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற நாள் முதல் பல அதிரடி திட்டங்களை செய்து வருகிறார். கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் இந்த காலகட்டத்தில்,தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உதாரணமாக நடுத்தர மக்களின் வறுமையை போக்ககொரோனா நிவாரண தொகை மற்றும் மளிகை பொருட்கள் வழங்குதல் போன்ற பல நலத்திட்ட உதவிகளை, மக்களுக்கு செய்து வருகிறது தமிழக அரசு இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் பொதுமக்கள் புகார் அளிக்க cmcell.tn.gov.in என்ற தனிப்பிரிவு இணையதளம் தொடக்கபட்டுள்ளது. இதில் பொதுமக்கள் முதல்வரிடம் நேரடியாக புகார் கொடுக்கலாம். வழங்கிய புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் இணையத்தில் உடனடியாக தெரிந்து கொள்ளலாம்.

Read More

கொரோனா தடுப்பூசி செலுத்த முன்பதிவு செய்யும் கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்வதற்காக மத்திய அரசு கோவின் இணையதளத்தை தொடங்கியது. அதில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா உள்ளிட்ட 10 மாநில மொழிகள் இடம்பெற்றிருந்தன. ஆனால், உலகின் மூத்த மொழியான தமிழ் சேர்க்கப்படவில்லை. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். ஒன்றிய அரசின் கோவின் இணையதளத்தில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் மட்டுமே இருந்த நிலையில் புதிதாக ஒன்பது மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளபோது தமிழ்வழியில் அந்த இணையதளத்தைப் பயன்படுத்திட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதன் அடுத்தகட்டத்தில் இரண்டு நாட்களுக்குள் தமிழ்மொழியிலும் இந்த வசதி செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசிக்கான இணையதளமான கோவின்(Cowin) இணையத்தில் தமிழ் மொழி 12வது மொழியாக சேர்க்கப்பட்டுள்ளது.…

Read More

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை இளைஞர் ஒருவர் பொதுவெளியில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தென்கிழக்கு பிரான்சில் உள்ள டிரோம் என்ற பகுதிக்கு கொரோனா தொற்றுக்கு பிறகு மக்களின் வாழ்க்கை எவ்வாறு உள்ளது என்பது குறித்து பார்வையிட சென்றிருந்தார். அப்போது எல்லோரும் அதிபரை பார்த்ததும் உற்சாகமாக குரல் கொடுக்க. கூட்டத்தில் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் அதிபரை கன்னத்தில் ஓங்கி அறைந்து ’மேக்ரான் ஒழிக’ என பிரெஞ்சு மொழியில் முழக்கம் எழுப்பினார். இந்த சம்பவம் கூட்டத்தில் இருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.பாதுகாப்பு படையினர் இளைஞரை உடனடியாக கைது செய்தனர். பொதுவெளியில் பிரான்ஸ் அதிபர் தாக்கப்பட்ட சம்பவம் பிரான்சில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.- மூவேந்தன்

Read More

சமூக வலைதளமான ட்விட்டரில் விலங்குகளின் பெயர்களில் தொடங்கப்பட்டுள்ள கணக்குகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதன் பின்னணி என்ன என்பது பற்றி காண்போம். மத்திய அரசை திமுகவினர் ஒன்றிய அரசு என குறிப்பிட தொடங்கியதே இதற்கான ஆரம்ப புள்ளியாகும். இதனையடுத்து பாஜக ஆதரவாளரும், மூத்த பத்திரிகையாளருமான மாலன் தமிழ்நாடு என்ற பெயரை தமிழகம் என அழைக்க வேண்டும் என கருத்து பதிவிட அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு தமிழ்நாடுதான் சரியான வார்த்தை என்பது திமுகவினர் உட்பட தமிழ் பிரியர்களின் வாதமாக இருக்க இந்து மக்கள் கட்சியின் ட்விட்டர் பதிவு எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல் ஆனது. அந்த பதிவில் “இவனுங்க பேசற பேச்ச பார்த்தா டைனோசர் கூட தமிழ்லதான் பேசிச்சின்னு சொல்லுவானுங்க போல இருக்கு” என தெரிவிக்க உடனடியாக ட்விட்டரில் விலங்குகள் பெயரில் கணக்குகள் தொடங்கப்பட்டன. #ஒன்றியஉயிரினங்கள் என்ற பெயரில் ட்விட்டரில் ஹேஷ்டேக் போட்டு டைனோசர், சிங்கம், யானை, வரையாடு,…

Read More

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து உலக சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே இரட்டை குழந்தைகளுக்கு தாயான அந்நாட்டைச் சேர்ந்த கோஷியாமி தமாரா சித்தோல் என்ற 37 வயது பெண் மீண்டும் கர்ப்பம் அடைந்திருந்தார். அவருக்கு கடந்த ஜூன் 7ஆம் தேதி பிரசவ வலி ஏற்படவே பிரிட்டோரியா நகரி்ல் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அறுவை சிகிச்சை மூலம் 7 ஆண் குழந்தைகள், 3 பெண் குழந்தைகள் பிறந்தன. மேலும் தாயும், 10 குழந்தைகளும் நலமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன் கடந்த மே மாதம்மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலி பகுதியில் 25 வயதுள்ள ஹலீமா சிஸே என்ற பெண் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றது தான் சாதனையாக இருந்தது. அதனை கோஷியாமி தமாரா சித்தோல் தற்போது முறியடித்துள்ளார்.- மூவேந்தன்

Read More

இந்திய அணியின்சிறந்த பந்து வீச்சாளர் அஸ்வினை சிறந்த வீரர் என அழைக்க சிக்கல் இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியதற்கு அஸ்வின் கிண்டலாக ட்விட்டரிl பதிலளித்துள்ளார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை எப்போதும்சிறந்த வீரர் என்று அழைப்பதில் பிரச்னை இருப்பதாக சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்தது சமூக ஊடகங்களில் விவாதமானது. இந்த நிலையில் மஞ்சு ரேக்கர் தனது ட்விட்டர் பதிவில் எக்காலத்துக்கும் சிறந்த வீரர் என்பது கிரிக்கெட் வீரருக்கு வழங்கப்படும் உயரிய பாராட்டு. டான் பிராட்மேன், சோபர்ஸ், கவாஸ்கர், டெண்டுல்கர், விராட் போன்றோர் தான் உள்ளனர்.ஆகவே எக்காலத்துக்கும் சிறந்த வீரர் என்ற பட்டியலில் அஸ்வின் இடம்பெறவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்த அஸ்வின், அந்நியன் படத்தில் சாரியிடம் அம்பி சொல்லும் வசனமான அப்டி சொல்லாதடா சாரி, மனசெல்லாம் வலிக்கிற்து என்ற மீமை பதிவிட்டுள்ளார். மஞ்சுரேக்கரை கலாய்த்த அஸ்வின்அஸ்வினின் இந்த பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

Read More

சமூக வலைத்தளங்களில் புதிய வரவாக அமைந்துள்ளது கிளப் ஹவுஸ் செயலி. வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என பல சமூக வலைதளங்கள் ஏற்கனவே உள்ள நிலையில் இந்த செயலியின் சிறப்புகள் என்னென்ன என்று பார்ப்போம்… கடந்த ஆண்டே கிளப் ஹவுஸ் செயலி இணையத்தில் அறிமுகமாகி இருந்தாலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர்தான் ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் பயனாளர்கள் பயன்படுத்தும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது. இதில் வீடியோ, போட்டோ ஆகியவற்றைப் பகிர முடியாது. ஆடியோவை மட்டுமே பகிரும் வண்ணம் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ஐயாயிரம் பேர் பங்கேற்கும் வகையில் உள்ள இந்த கிளப் ஹவுஸ் செயலியில் பல்வேறு தலைப்புகளின் கீழ் உரையாடலாம். ஒவ்வொருவரும் அவரவர் விரும்பும் தலைப்புகளின் கீழ் நடைபெறும் உரையாடல்களில் பங்கு பெறலாம். மேலும் Room எனப்படும் இந்த அரட்டை பக்கத்தில் Hand Raising ஐகான் மூலம் உரையாடல்களில் தமது கருத்தை தெரிவிக்கலாம். அதேபோல் பயனாளர்கள் தங்களது…

Read More

மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தி, ஆஷிஷ் லதா ராம்கோபினுக்கு தென்னாப்பிரிக்க நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது. மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தியும், தென் ஆப்பிரிக்காவில் வாழும் பிரபல மனித உரிமை ஆர்வலர்கள் எலா காந்தி மற்றும் மறைந்த மேவா ராம்கோபிந்தின் மகளுமான ஆஷிஷ் லதா ராம்கோபின்( வயது 56) அகிம்சைக்கான சர்வதேச மையத்தில் நிர்வாக இயக்குநராக இருந்தார். மேலும், இந்தியாவில் இருந்து சரக்குகளை, சுங்கவரி இல்லாமல் இறக்குமதி செய்து தருவதாக மகாராஜ் என்ற தொழிலதிபரிடம் இருந்து இந்திய மதிப்பில் சுமார் 3 கோடியே 33 லட்சம் ரூபாயை ஆஷிஷ் லதா பெற்றுள்ளார். ஆனால் சொன்னபடி ஆஷிஷ் லதா செய்யாததால், தொழிலதிபர் மகாராஜ் ஆஷிஷ் லதா மீது பண மோசடி புகார் அளித்தார். 2015 இல் தொடரப்பட்ட இந்த வழக்கில் ஆஷிஷ் லதாவுக்கு பின்னர் ஜாமின் வழங்கப்பட்டது. இந்நிலையில்,தற்போது அந்த வழக்குக்கான தீர்ப்பு வெளியாகி உள்ளது அதில்ஆஷிஷ் லதா ராம்கோபினுக்கு…

Read More

போலி சாதி சான்றிதழ் அளித்து அமராவதி மக்களவை தனித்தொகுதியில் வெற்றி பெற்ற நடிகை நவ்னீத்துக்கு ரூ. 2 லட்சம் அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். தமிழில் அரசாங்கம் மற்றும் அம்பாசமுத்திரம் அம்பானி ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்தவர் நவ்னீத் கவுர். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு மஹாராஷ்டிர மாநிலத்தின் சுயேட்சை எம்.எல்.ஏ., ரவி ராணாவை திருமணம் செய்துகொண்டார். அதனைத் தொடர்ந்து கடந்த 2014 ஆம் ஆண்டு அமராவதி மக்களவை தனித்தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். பின்னர் மீண்டும் அதே தொகுதியில் 2019 ஆம் ஆண்டு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் சுயேட்சையாகவே நின்று வெற்றி பெற்று எம்.பி.யானார். ஆனால் பட்டியலினத்தவர் என்று போலியாக சாதி சான்றிதழ் காட்டி நவ்னீத் வெற்றி பெற்றதாக சிவசேனா கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த் ராவ் மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின்…

Read More

அமேசான் நிறுவன தலைவர் ஜெஃப் பெஸாஸ் விண்வெளிக்கு பயணிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரின் ‘Blue Origin’ நிறுவனம் விண்வெளிக்கு முதல் முறையாக மனிதர்களை அனுப்ப உள்ள நிலையில், அந்த முதல் பயணத்தில்தான் ஜெஃப் பெஸாஸ் பயணிக்க உள்ளார். வரும் ஜூலை 20 ஆம் தேதி இந்த விண்வெளிப் பயணம் இருக்கும் என்றும், ஜெஃப் உடன் அவரது சகோதரர் மார்க் பெஸாஸ் மற்றும் பயணிப்பதற்கான ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆகியோரும் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெஃப் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் “ஐந்து வயதில் இருந்தே விண்வெளிக்கு பயணிக்க வேண்டுமென்ற பெருங்கனவு எனக்கு உள்ளது என்றும், அது மிகவும் சாகசம் நிறைந்த ஒன்றாக இருக்கும்” என்றும் அவர் கூறியுள்ளார்.- மூவேந்தன்

Read More