காந்தியின் கொள்ளுப் பேத்திக்கு மோசடி வழக்கில் சிறை! – நடந்தது என்ன?

SHARE

மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தி, ஆஷிஷ் லதா ராம்கோபினுக்கு தென்னாப்பிரிக்க நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது.

மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தியும், தென் ஆப்பிரிக்காவில் வாழும் பிரபல மனித உரிமை ஆர்வலர்கள் எலா காந்தி மற்றும் மறைந்த மேவா ராம்கோபிந்தின் மகளுமான ஆஷிஷ் லதா ராம்கோபின்( வயது 56) அகிம்சைக்கான சர்வதேச மையத்தில் நிர்வாக இயக்குநராக இருந்தார்.

மேலும், இந்தியாவில் இருந்து சரக்குகளை, சுங்கவரி இல்லாமல் இறக்குமதி செய்து தருவதாக மகாராஜ் என்ற தொழிலதிபரிடம் இருந்து இந்திய மதிப்பில் சுமார் 3 கோடியே 33 லட்சம் ரூபாயை ஆஷிஷ் லதா பெற்றுள்ளார்.

ஆனால் சொன்னபடி ஆஷிஷ் லதா செய்யாததால், தொழிலதிபர் மகாராஜ் ஆஷிஷ் லதா மீது பண மோசடி புகார் அளித்தார். 2015 இல் தொடரப்பட்ட இந்த வழக்கில் ஆஷிஷ் லதாவுக்கு பின்னர் ஜாமின் வழங்கப்பட்டது.

இந்நிலையில்,தற்போது அந்த வழக்குக்கான தீர்ப்பு வெளியாகி உள்ளது அதில்ஆஷிஷ் லதா ராம்கோபினுக்கு தென்னாப்பிரிக்க டர்பன் சிறப்பு வணிக குற்றவியல் நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. அவர் மேல்முறையீடு செய்ய முடியாத படி அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

  • மூவேந்தன்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சீன பொறியாளர்கள் சென்ற பேருந்தில் குண்டு வெடிப்பு…13 பேர் பலி…

Admin

காட்டில் உறங்கும் யானைக் கூட்டம்… சேட்டை செய்யும் குட்டி யானை… வைரலாகும் வீடியோ

Admin

நான் தான் அப்பவே சொன்னேனே.. சீனாவை வம்பிழுக்கும் டிரம்ப்!

Admin

கூடிய சீக்கிரம் டெல்டா கொரோனா உலகை ஆக்கிரமிக்கும்: எச்சரிக்கும் WHO

Admin

வேகமாக பரவும் குரங்கு அம்மை நோய் அதிக பாதிப்பு இல்லை

Admin

ரூ.30,000 விலை போகின்றதா இந்த 5 ரூபாய் நோட்டு?

அமெரிக்காவில் 80% டெல்டா கொரோனா வெளியான அதிர்ச்சி தகவல்!

Admin

வடக்கு கூட்டணி படையினருடனான சண்டையில் 350 தாலிபான்கள் பலி?

Admin

உடைந்த பாறை… உறைந்த மக்கள்… ஜப்பானை அச்சுறுத்தும் ஒன்பதுவால் நரி!.

ஏன் துருக்கியில் மட்டும் நில நடுக்கம் அதிகம் ஏற்படுகின்றது ? – இதுதான் காரணமா?

Nagappan

வீட்டிலிருந்து வெளிவர தடுப்பூசி செலுத்திய ஆதாரம் தேவை: சவுதி அரசு

உங்களை மன்னிக்க மாட்டோம்.. கண்டிப்பா உங்களை வேட்டையாடுவோம் – ஆப்கன் குண்டுவெடிப்புக்கு அமெரிக்க அதிபர் கடும் எச்சரிக்கை

Admin

Leave a Comment