Author: Admin

பிரம்மபுத்திரா நதியில் படகுகள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு மாநிலமான அசாமில் உள்ள பிரம்மபுத்திரா நதியில் மஜூலி என்ற இடத்தில் இருந்து பயணிகள் படகு ஒன்று நிமதி படித்துரை நோக்கி சென்று கொண்டிருந்தது. எதிர்திசையில் மற்றொரு படகு சென்றது. ஜோர்ஹாட் பகுதியில் வந்த போது இரண்டு படகுகளும் வந்தபோது திடீரென்று எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன. இந்த விபத்தில் படகுகளில் 200க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்துள்ள நிலையில் பலர் மாயமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தகவல் அறிந்த மாநில மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 20க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ள நிலையில் 60க்கும் அதிகமானோரை காணவில்லை. அவர்களை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படகு விபத்து குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், அசாம் மாநிலத்தில் படகு விபத்து குறித்த செய்தி கவலை அளிக்கிறது. மாயமான…

Read More

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ள நிலையில் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியை கௌரவிக்கப்படும் வகையில் சர்ப்பிரைஸ் அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இந்தாண்டுக்கான டி20 உலகக்கோப்பை திட்டமிட்டபடி இந்தியா சார்பில் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 16 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இதற்காக 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் , இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஸர் படேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், முகமது சமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை கௌரவப்படுத்தும் விதமாக டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டுள்ளார். இதனை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில்…

Read More

சட்டசபையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் தெரிவித்த கருத்தால் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதிர்ச்சியடைந்தன. தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்தார். இதனை எதிர்த்து அதிமுக, பாஜக உறுப்பினர்கள் வழக்கம்போல வெளிநடப்பு செய்தனர். இதற்கு முன்பாக சபாநாயகர் அப்பாவு பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனை பேச அனுமதித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், குடியுரிமை திருத்தச் சட்டம் எந்த இஸ்லாமியர்களுக்கும் எதிரான சட்டமில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். அப்போது இடைமறித்த சபாநாயகர் அப்பாவு, “இந்தச் சட்டம் என்றால் முதலமைச்சர் கொண்டுவந்த சட்டமா?” என்று கேள்வி எழுப்ப அவையில் சிரிப்பொலி எழுந்தது. உடனே நயினார் நாகேந்திரன் நான் சொல்வது மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தை குறிப்பிடுவதாக கூறினார். தொடர்ந்து ஆதரவாக பேசி வந்த நிலையில் மத்திய அரசு கொண்டு…

Read More

பாப் இசை கலைஞர் டிம் பெர்குலிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு கூகுள் சிறப்பு டூடுளை வெளியிட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டை சேர்ந்த டிம் பெர்குலிங், தனது 16 வயது முதல் புதுப்புது இசையை அமைத்து கலைத்துறையில் ரசிகர்களை கவர்ந்து வந்தார். அவீச்சி மற்றும் டிம்பெர்கு என்று அன்போடு ரசிகர்களால் அறியப்பட்டார். கடந்த 2011 முதல் 2016 காலக்கட்டத்தில் 220க்கு மேற்பட்ட மேடைகளில் கலைப்படைப்புகளை வெளியிட்டு, ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர். இவர் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், அவரது 32வது பிறந்த தினமான இன்று, டிம் பெர்குலிங்கின் சேவையை பாராட்டி, அவரது கலைப்படைப்பில் இடம்பெற்ற ‘Wake Me Up’ என்ற பாடலுடன் சிறப்பு டூடுளை கூகுள் வெளியிட்டுள்ளது.

Read More

சிவகங்கை மாவட்டம் அகரம் அகழாய்வு தளத்தில் மேலும் ஒரு உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பண்டைய தமிழர்களின் நீர் மேலாண்மைக்கு சான்றாக விளங்குவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே கீழடி, அகரம்,  மணலூர், கொந்தகை ஆகிய 4 இடங்களில் இதுவரை 6 கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றுள்ளன. 7ம் கட்ட அகழாய்வு பணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. இதில் அகரத்தில் இதுவரை 8 குழிகள் தோண்டப்பட்டு ஏராளமான பானைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது அகரம் அகழாய்வு தளத்தில் 8 அடி ஆழத்தில் புதிதாக மேலும் ஒரு உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ஒரு குழியில் 15 சுடுமண் உறைகள் கொண்ட 15 அடி உறைகிணறும், மற்றொரு குழியில் 8 சுடுமண் உறைகள் கொண்ட 8 அடி உறைகிணறும் கண்டுபிடிக்கப்பட்டன. தற்போது 3வது உறைகிணற்றை கண்டுபிடித்துள்ள ஆராய்ச்சியாளர்கள்…

Read More

டெல்லியில் கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தியை பொது இடங்களில் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் சிலை வைத்து வழிபாடு செய்யவும், ஊர்வலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது டெல்லியில் கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தியை பொது இடங்களில் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மாறாக விநாயகர் சதுர்த்தியை தங்களுடைய இல்லங்களில் இருந்து கொண்டாடுமாறு மக்களுக்கு டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.

Read More

சசிகலா, ஜெயலலிதாவுக்கு சொந்தமான 157 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையின் போது பினாமி சொத்துக்கள் என வகைப்படுத்தப்பட்ட சொத்துக்களை கைப்பற்ற வருமான வரித்துறை முடிவு செய்தது. அதன்படி சென்னையை அடுத்த பையனூரில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள பங்களா முடக்கப்பட்டிருக்கிறது. பினாமி சொத்து சட்டத்தின் கீழ் சசிகலா சொத்தை முடக்கி வருமான வரித்துறை நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது. ஏற்கனவே 2,000 கோடி ரூபாய் அளவிற்கு பினாமி சொத்துக்கள் முடக்கப்பட்டிருக்கின்றன. தற்போது பையனூர் பங்களாவும் முடக்கப்பட்டிருக்கிறது. பையனூர் பங்களா இசையமைப்பாளர் கங்கை அமரனிடம் இருந்து வலுக்கட்டாயமாக சசிகலா மிரட்டி பெற்றதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருந்தது.

Read More

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தற்போது மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றது இதில் பேரவை விதி 110-இன் கீழ் பல்வேறு அறிவிப்புகள் வெளியிட்டு பலரது வரவேற்பையும் பெற்று வருகின்றார் மு.க ஸ்டாலின் . அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட ஒரு அறிவிப்பு பல்வேறு தரப்பினரிடையேயும் வரவேற்பை பெற்றது. அதாவது சமூக சீர்த்திருத்தவாதி பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதியை இனி சமூகநீதி நாளாக தமிழ்நாடு அரசு கொண்டாடும் என அறிவித்தார். மேலும், பெரியார் பிறந்த செப்டம்பர் 17 ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும். சமூக நீதி நாளன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊழியர்கள் உறுதிமொழி எடுப்பார்கள் எனக் கூறினார். இதற்கு அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வரவேற்பு தெரிவித்தன. குறிப்பாக கடவுள் நம்பிக்கை கொண்ட கட்சியாக பாஜக இருந்தாலும் சமூக நீதிக்காக இதனை வரவேற்பதாக அக்கட்சியின் சட்டப்பேரவை தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். இந்த…

Read More

முதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் இன்று சட்டப்பேரவையில் பேசிய போது, திமுக ஆட்சி ஒடுக்கப்பட்டவர்களுக்கு பாடுபடும் அரசாக விளங்குவதாக கூறினார். மேலும், சாதியால் புறக்கணிக்கப்பட்டவர்களை அன்பால் அரவணைப்போம். மாநில அளவில் ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர்களின் பிரச்னைகளை தீர்க்க நல ஆணையம் அமைக்கப்படும். மாநில அளவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் தன்னாட்சி அதிகாரத்துடன் உருவாக்கப்படும் எனக் கூறினார். அதே சமயம், மாநில அளவில் ஆதிதிராவிடர் நல ஆணையம் உருவாக்க தனிச் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பதிவான வழக்குகளை விரைந்து விசாரிக்க 4 கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.சேலம், கிருஷ்ணகிரி, மதுரை, நெல்லை மாவட்டங்களில் கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றார். மேலும் தொடர்ந்து பேசிய ஸ்டாலின் சாதியை ஒழிக்க முன்னுதாரணமாக இருக்கும் கிராமத்திற்கு ரூ.10 லட்சம் சிறப்புத் தொகை பரிசாக வழங்கப்படும்” என்றார்.

Read More

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதன் மூலம், நீரஜ் சோப்ராவின் விளம்பர ஒப்பதங்களின் மதிப்பு அதிகரித்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று சாதனை படைத்திருந்தார். இதன் மூலம், அவருக்கு பல கோடி ரூபாய் பரிசு, ஊக்கத்தொகை, சன்மானம் கிடைத்தது. டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு முன்னதாக விளம்பர ஒப்பதங்களின் மூலம் ஆண்டுக்கு 15 முதல் 25 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டி வந்த நீரஜ் சோப்ரா, தற்போது கோடி கணக்கில் வருமானம் ஈட்ட தொடங்கி உள்ளார். அவருடைய விளம்பர ஒப்பந்தங்களின் மதிப்பு தற்போது 100 மடங்கு அதிகரித்து கோடிகளை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை கிரிக்கெட் நட்சத்திரங்கள் மட்டுமே இத்தகைய வருமானத்தை ஈட்டி வந்த நிலையில் தற்போது முதல் முறையாக தடகள விரருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

Read More