முன்னாள் அமைச்சர் வேலுமணி அமைச்சராக இருந்த போது அரசு டெண்டர்களை எடுத்த அதிமுக பிரமுகர் வெற்றிவேல் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்
திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் முன்னாள் அமைச்சர்களின் இல்லங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபடுவது நடந்து வருகிறது.
அந்த வகையில்முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு சொந்தமான 60க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்புலஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்சோதனை நடத்தினர்.
இந்த நிலையில் வேலுமணிக்கு நெருக்கமான ஒப்பந்ததாரரும் அதிமுக பிரமுகருமான வெற்றிவேலுக்கு சொந்தமான சென்னை எம்ஜிஆர் நகர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் 11.8 லட்சம் பணமும் ஆவணங்களும் கிடைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது
இந்த நிலையில் தற்போது வெற்றிவேலின் தந்தை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே வெற்றிவேலின் வீட்டில் ஆவணங்களை கைப்பற்றிய நிலையில் தற்போது அவரது தந்தையின் வீட்டிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.