நீட் தேர்வு தொடர்பாக தன்னை குறிப்பிட்டு பாஜக ஆதரவாளர் பதிவிட்ட கருத்துக்கு நடிகர் சித்தார்த் பதிலடி கொடுத்துள்ளார்.
நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நேற்று நடைபெற்றது.
தமிழகத்தில் இந்த தேர்வை 1.10 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதனிடையே இன்று தமிழக சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் செல்வகுமார் என்ற பாஜக ஆதரவாளர் ட்விட்டரில் நடிகர் சித்தார்த்தை குறிப்பிட்டு, “நீட் தேர்வை முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே ரத்து செய்வோம் – தேர்தல் வாக்குறுதி…இன்று நீட் நடக்கிறது….
பொய் சொன்னால் முதல்வராக இருந்தாலும் கன்னத்தில் அறைவேன் -Actor Siddharth…ஐயா சித்தார்த் என்ன பண்ண போறீங்க ?” என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதனை கண்டு கடுப்பான சித்தார்த், “மூதேவி. கோவமோ சந்தேகமோ வந்தா, துப்பிருந்தா போய் நீ கேளு. இல்ல உங்கப்பன போய் கேளு. நான் என் வேலையத்தாண்டா பாக்கறன்.
பொறுக்கி பசங்க. இதுவே வேலையா போச்சு. ட்விட்டரை டாய்லெட்டாக்கி வச்சுருக்கீங்க. வேற எங்க மலரும்? சாக்கடையிலதான் மலரும். எழவு.ஹிந்தில சொல்லட்டா?” என காட்டமான பதிலை அளித்துள்ளார்.