ஜெயலலிதா பல்கலைகழக இணைப்பு மசோதாவிற்கு எதிராக சாலையில் தர்ணா செய்த ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டனர்.
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தைப் பிரித்து விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு டாக்டர். ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் கடந்த அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது.
அதன்பின் தமிழகத்தில் புதிதாக ஆட்சிக்கு வந்த திமுக அரசு இந்தப் பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்படும் என்று அறிவித்திருந்தது.
சட்டப்பேரவையில் ஜெயலலிதா
பல்கலைக்கழக விவகாரம் குறித்து பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பெயர் வைக்க வேண்டும் என்பதற்காகவே அதிமுக அரசு ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை கொண்டு வந்தது என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்
பின்னர் சட்டப்பேரவை நடக்கும் கலைவாணர் அரங்கத்துக்கு வெளியே வாலாஜா சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர்.
1 comment
[…] […]