பாஜக மாநில பொதுச்செயலாளர் கே.டி. ராகவன் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து பாஜக பிரமுகரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜகவின் மாநில பொதுச்செயலாளராக இருந்த கே.டி. ராகவன் இடம் பெற்றதாக பாலியல் சர்ச்சைக்குள்ளான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை யூட்யூபர் மதன் வெளிச்சத்துக்கு கொண்டு வர பல்வேறு தரப்பில் இருந்தும் கே.டி. ராகவனுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றது.
இதனைத்தொடர்ந்து பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக கே.டி. ராகவன் அறிவித்தார். இதனிடையே நடிகையும், பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம் இந்த வீடியோ குறித்து பெயர் குறிப்பிடாமல் இரு ட்வீட்களை வெளியிட்டுள்ளார்.
அதில் ஒன்றில் இன்று காலை எழுந்தவுடன் என் கண்களை என்னால் நம்ப முடியாத அளவுக்கு ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மற்றொரு ட்வீட்டில் சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். சட்டத்தின் முன்னிருந்து தப்பினாலும் தெய்வம் தண்டிக்கும். அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என தெரிவித்துள்ளார்.