மற்றொரு கீழடியா இலந்தைக்கரை? அகழாய்வில் கிடைத்த முக்கிய தடயம்!

SHARE

சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வில் தமிழர்களின் பழமையான நாகரீகத்தை பறைசாற்றும் ஏராளமான ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன.

அதே போல் காளையார்கோவில் அருகே உள்ள இலந்தைக்கரை கிராமத்தில் தோண்டும்போது முதுமக்கள் தாழி உள்ளிட்டவை அடிக்கடி கிடைத்து வந்ததால் இங்கு அகழாய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை வலுத்து வந்தது.

தமிழ் ஆர்வலர்கள் அப்பகுதி மக்களின் கோரிக்கையினை ஏற்ற தமிழகஅரசு இந்தியத் தொல்லியல் துறை, அழகப்பா பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைக்கு இலந்தக்கரை கிராமத்தில் அகழாய்வு செய்ய அனுமதி வழங்கியது.

இதையடுத்து நேற்று அகழாய்வு தொடங்கப்பட்டது. இந்த அகழாய்வில் வரலாற்றுத்துறை இணைநிலை பேராசிரியர் ராசவேலு (இயக்குநர்), தலைவர் சரவணக்குமார் (இணை இயக்குநர்), இந்திய தொல்லியல் துறை இணை தொல்லியல் தலைமை அலுவலர் நம்பிராஜன், திருச்சி தொல்லியல் வட்ட கண்காணிப்பாளர் அருண்ராஜ், மைசூர் அகழாய்வு பிரிவு தொல்லியல் அலுவலர் அறவாழி, தொல்லியல் ஆய்வாளர்கள் எத்திஸ்குமார், முத்துக்குமார், வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியர் பரந்தாமன், வரலாற்று ஆய்வாளர் இலந்தக்கரை ரமேஷ் மற்றும் ஆய்வு மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த அகழாய்வினை தொடங்கி வைத்த அழகப்பா பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் எம்.எல்.ராஜா கூறுகையில்

இப்பகுதியில் மக்கள் வசித்த மேட்டிலும் புதைவிடத்திலும் இன்று அரை இஞ்ச் அளவிற்கு பள்ளம் தோண்டியதில், தென்னக பிராமி எழுத்துடன் கூடிய வட்டமான மட்கல ஓடு கிடைத்துள்ளது.

இது வணிகர்கள் பயன்படுத்திய முத்திரையாக இருக்க வேண்டும். இப்பகுதி தென்னகம் மற்றும் வட இந்திய வணிகர்களுடன் தொடர்புடையதாக இருந்திருக்க வேண்டும். இதன் மூலம் கீழடிக்கு இணையான பண்பாட்டு வரலாற்றுக் கூறுகளை இலந்தக்கரை பெற்றுள்ளதை அறிய முடிகிறது என்றார்.

ஆகவே இலந்தைக்கரை மற்றொரு கீழடியாக இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர் தொல்லியல் வல்லுநர்கள் .


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

முதலமைச்சரின் கொரோனா நிதிக்கு ரூ.50 லட்சம் அளித்தார் ரஜினிகாந்த்

“கள்ளக்காதலன் மீதான கோபத்தில் தான் குழந்தையை அடித்தேன்’ – கொடூர தாய் பகீர் வாக்குமூலம்

Admin

திணிக்கப்பட்டதா திராவிடம்? – நூல் அறிமுகம்

சாலையில் இனி பெண் காவலர்கள் நிற்க வேண்டாம்…. டிஜிபி திரிபாதி உத்தரவு

Admin

பாத்திரம் கழுவும் சுதந்திரப் போராட்ட தியாகியின் மகள் – ஓய்வூதியம் கிடைக்காமல் அவதி

Admin

கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது!.

Admin

ஆட்சி நடத்த முடியல அதான் வெள்ளை அறிக்கை: முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் கருத்து

Admin

விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது – தேமுதிக

எம்எல்ஏக்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்… சபாநாயகர் அப்பாவு

Admin

தமிழகத்தில் முகக் கவசம் அணியாவிட்டால் அபராதம்!

Admin

ஆத்தாவுக்கே இந்த நிலமையா.. கோயில்களை திறக்க சாணிப்பவுடர் குடித்த பெண் !

Admin

சிவசங்கர் பாபாவின் ஜாமின் மனு தள்ளுபடி.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Admin

Leave a Comment