முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் அவரை விமர்சித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி கோவை மற்றும் சென்னை மாநகராட்சிக்கான ஒப்பந்த டெண்டர்களில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இன்று அவருக்கு சொந்தமான 55 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் “மிஸ்டர் வேலுமணி.. இப்ப தெரியுதா? திமுகன்னா என்னன்னு… பதவியில் இருக்கும் வரை ஆடுனீங்களே.. பதவி போன பிறகு பாருங்க…உங்க ஆட்டத்தை எப்படி ஆட்டப் போறோம்ன்னு பாருங்க…ஒவ்வொரு தொண்டனும் வெறித்தனமா இருக்கான்..அமைச்சர் பதவி வச்சிக்கிட்டு கழக தொண்டர்கள் மேல எத்தனை பொய் வழக்கு போட்டீங்க” என அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளார்.
இந்த வீடியோவை பலர் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.