தமிழகத்தில் பள்ளி திறப்பு எப்போது ? – நாளை மறுநாள் முக்கிய ஆலோசனை

SHARE

தமிழகத்தில் பள்ளிகளை திறக்க செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள், மாணவர்கள் சேர்க்கை உயர்த்துதல் உள்ளிட்டவை தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா நாளை மறுநாள் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டது. சுமார் 9 மாதங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டு, ஜனவரி மாதம் முதல் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, கொரோனா 2ம் அலை தொடங்கியதால்,மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டதோடு,பொதுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டதால் தற்போது கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது.

பல்வேறு மாநிலங்களில் தொற்று குறைந்துள்ளதால் அங்கு பள்ளிகள் திறக்க அந்தந்த மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு வருகின்றன. அதேப்போல் தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பது குறித்தும், செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும் விரைவில் நல்ல அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில்,காணொலி காட்சி மூலம் நாளை மறுநாள் நடைபெறும் ஆலோசனையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா ஆணையர் நந்தகுமார், இயக்குநர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில், பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் முதலமைச்சருடன் மீண்டும் ஆலோசனை மேற்கொள்வார்.

அதன்பின் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

முன்பே டினிட்டஸ் குறித்து சொன்னார் அஜித்? நாமதான் கவனிக்கல

Admin

முதல் தங்க நாணயத்தை வெளியிட்ட சோழ அரசர் மதுராந்தகனா? இராஜராஜனா? – சிறப்புக் கட்டுரை

இரா.மன்னர் மன்னன்

செயற்கை பண்ணை குட்டை மூலம் விவசாயம் செய்து வரும் சகோதரர்கள்..!!

Admin

“கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனாரு” – கமல்ஹாசனை வச்சு செய்த வானதி சீனிவாசன்

Admin

திமுகவிற்கு தோள் கொடுக்கும் அதிமுக எதற்கு தெரியுமா???

Admin

“தமிழ் மொழி இனிமையான மொழி”.. சட்டப் பேரவையில் ஆளுநர் புகழாரம்

Admin

ரோட்டில் ரகளை செய்த வழக்கறிஞரின் ஜாமீன் மனு தள்ளுபடி!

Admin

தமிழகத்தில் சமஸ்கிருத கல்வெட்டியாளர் தேவை என்ன? – உயர்நீதிமன்ற கிளை சரமாரி கேள்வி

Admin

குடிக்கமாட்டேன் சொல்லுங்க ஜாமின் கிடைக்கும் : உயர்நீதிமன்றம்

Admin

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

தற்போது வரை நீட் தேர்வு நடைமுறையில் தான் உள்ளது – அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்

Admin

அன்போடு பார்த்துக்கொண்ட மருத்துவர்களுக்கு நன்றி – மூதாட்டியின் நெகிழ்ச்சி கடிதம்

Admin

Leave a Comment