தமிழகத்தில் பள்ளி திறப்பு எப்போது ? – நாளை மறுநாள் முக்கிய ஆலோசனை

SHARE

தமிழகத்தில் பள்ளிகளை திறக்க செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள், மாணவர்கள் சேர்க்கை உயர்த்துதல் உள்ளிட்டவை தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா நாளை மறுநாள் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டது. சுமார் 9 மாதங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டு, ஜனவரி மாதம் முதல் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, கொரோனா 2ம் அலை தொடங்கியதால்,மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டதோடு,பொதுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டதால் தற்போது கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது.

பல்வேறு மாநிலங்களில் தொற்று குறைந்துள்ளதால் அங்கு பள்ளிகள் திறக்க அந்தந்த மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு வருகின்றன. அதேப்போல் தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பது குறித்தும், செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும் விரைவில் நல்ல அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில்,காணொலி காட்சி மூலம் நாளை மறுநாள் நடைபெறும் ஆலோசனையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா ஆணையர் நந்தகுமார், இயக்குநர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில், பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் முதலமைச்சருடன் மீண்டும் ஆலோசனை மேற்கொள்வார்.

அதன்பின் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

2ஆம் கட்ட கொரோனா நிவாரணத்தொகை, மளிகைப்பொருட்கள் இன்று முதல் விநியோகம்…!

Admin

கீழடி ஆராய்ச்சி வெட்டி வேலை… வெறுப்பைக் கக்கும் துக்ளக்… சரஸ்வதியை தேடுவது என்ன வேலை? கேள்வி கேட்கும் ஆய்வாளர்கள்…

Admin

12 -ம் வகுப்பு மதிப்பெண் மதிப்பெண் கணக்கீடு எப்படி?முதல்வர் அதிரடி அறிவிப்பு

Admin

கொரோனா கட்டளை மையங்கள் – தொடர்பு எண்கள் வெளியாகின.

தனது கணக்கில் இருந்து டுவிட் போட்டது யார்?: ஹெச்.ராஜா சொல்லவில்லை, மாஃபா பாண்டியராஜனாவது சொல்வாரா?

24 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தம்

Admin

சார் அது டைப்பிங் மிஸ்டேக் .. கொங்குநாடு விவகாரம் விளக்கம் கொடுத்த அண்ணாமலை!

Admin

பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை

Admin

இதுக்கு இல்லையா ஒரு எண்ட்டு… 11 முறையாக ஆறுமுகசாமி ஆணையத்துக்கு கால நீட்டிப்பு

Admin

ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது: அமித் ஷா பேச்சுக்கு ஸ்டாலின் கண்டனம்

Nagappan

உன் புன்னகை இன்னும் என்னை உருக வைக்கிறது… அன்பு மழை பொழிந்த பவித்ரா நடராஜன்

Admin

Leave a Comment