சென்னையில் ஜிகா வைரஸ் கண்டறியும் பரிசோதனை மையம் செயல்பட தொடங்கியுள்ளது.
கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் வேளையில் தற்போது ஜிகா வைரசும் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகிறது.
கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், தமிழகத்திலும் பாதிப்பு உள்ளதா என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
தமிழக எல்லைப்பகுதி மற்றும் அனைத்து மாவட்டங்களிலும், ஜிகா வைரஸ் தொடர்பாக பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
எலிசா பரிசோதனையைத் தொடர்ந்து, பி.சி.ஆர். பரிசோதனையிலும் ஜிகா வைரஸ் தொற்றைக் கண்டறிய தேவையான நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத்துறை எடுத்து வருகிறது.
இந்நிலையில், சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மாநில பொது சுகாதார ஆய்வகத்தில் ஜிகா வைரஸ் தொற்றை கண்டறியும் சோதனை மையம் செயல்பட தொடங்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்