‘கொங்குநாடு’கோரிக்கை: இலக்கிய ஆதாரத்தை தவறாக பதிவிட்ட வானதி சீனிவாசன் !

SHARE

கொங்கு நாடு தனி மாநில கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இலக்கியங்களில் இருந்து ஆதாரங்களை மேற்கோள்காட்டி பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பது விவாதப் பொருளாகி உள்ளது.

மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்ட எல். முருகன் பற்றிய மத்திய அரசின் செய்திக் குறிப்பில் கொங்குநாடு என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் தமிழகத்தில் கொங்குநாடு என ஒரு மாவட்டம் இல்லை ஆகவே கொங்குநாடு என மத்திய அரசு ஏன் குறிப்பிட்டது என கேள்வி எழுந்த நிலையில் கொங்குநாடு தனி மாநிலம் உருவாக்கப்படலாம் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருப்பதாகவும் பிரபல நாளிதழ் செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இன்று வெளியான நாளிதழ் செய்தியை தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன். அத்துடன் கொங்குநாடு தொடர்பான பல்வேறு இலக்கிய ஆதாரங்களையும் வானதி சீனிவாசன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனால் வானதி சீனிவாசன், கொங்கு தனி மாநில கோரிக்கையை ஆதரிக்கிறாரா? என அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் வானதி சீனிவாசன் தனது முக நூல் பதிவில்
கொங்கு தேர் வாழ்க்கை என்று இறையனாரின் சங்கப்பாடல் காலம் முதல் கொங்கு நாடு என்ற வரையறை உண்டு.


அண்ட நாடு, அரையன் நாடு, ஆறைநாடு, ஆனைமலை நாடு, ராசிபுர நாடு, ஒருவங்க நாடு,காங்கேயம் நாடு, காஞ்சிக்கோயில் நாடு, காவடிக்கன் நாடு, கிழங்கு நாடு, குறும்பு நாடு, தட்டையன் நாடு, தலையன் நாடு, திருவாவினன் குடி நாடு, தென்கரை நாடு, நல்லுருக்கன் நாடு, பூந்துறை நாடு, பூவாணிய நாடு, பொன்களூர் நாடு, மணல் நாடு, வடகரை நாடு, வாரக்கண் நாடு, வாழவந்தி நாடு, வெங்கால நாடு என்று 24 நாடுகள் உள்ளடக்கிய கொங்கு நாடு என்று கொங்கு மண்டல சதகங்களில் குறிப்பு இருப்பதாக கூறியுள்ளார் .

இதில் கொங்குதேர் வாழ்க்கை என தொடங்கும் பாடல் கொங்கு பகுதியினை குறிப்பதாக கூறியுள்ளார்.

அந்த பாடல் இதோ

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே

பாடல் விளக்கம்:

குறுந்தொகை பாடல்களைக் கொண்ட நான்கு முதல் எட்டு அடிகளாலான இரண்டாம் பாடலாகிய இப்பாடல் திருவிளையாடல் திரைப்படத்தால் புகழ்பெற்றது.இறைவனே (இறையனார்) எழுதியதாக நம்பப் படுகிறது.

கொங்கு- பூவின் மகரந்தம்
தேர்- தேர்நெடுக்கும்
வாழ்க்கை-வாழும்
அஞ்சிறைத்தும்பி-உள்ளே சிறகுகளை உடைய தும்பி(வண்டு)-(அம் சிறை -அழகிய சிறகுகள்)
காமம் செப்பாது -நான் விரும்பியதைச் சொல்லாது
கண்டது மொழிமோ-நீ கண்டறிந்ததைக் கூறு
பயலியது கெழீய நட்பின் – பல பிறவிகளிலும் நட்புடன் விளங்கும்(கெழி-நட்பு)
மயிலியல்-மயில் போன்ற
செறியியெற் றரிவை- செறிவான பற்களைக்(எயிறு) கொண்ட பெண்
கூந்தலின்-கூந்தலை விட
நறியவும் உளவோ- மணமிகுந்த ஏதேனும் உள்ளதோ
நீ அறியும் பூவே- நீ அறிந்த பூக்களிடம்

கருத்து:மலர்களில் மகரந்தங்களை எடுத்து வாழும் அழகிய சிறகுகளை உடைய தும்பியே! நீ அறிந்த பூக்களில் என்னுடன் பல பிறப்புகளில் நட்புடன் பழகும் மயில் போல் அழகுடைய அழகிய பற்களை உடைய பெண்ணில் கூந்தலைவிட மணமுடையது ஏதேனும் உள்ளதோ?எனக்குப் பிடித்ததைக் கூறவேண்டாம்.நீ கற்றறிந்ததைக் கூறு !

திருவிளையாடற் புராணத்திலும் இந்தப் பாடல் மேற்கோள் காட்டப் படுகிறது. ஆக இங்கு கொங்கு என்பது கொங்கு மண்டலத்தை குறிப்பது அல்ல மலரினை குறிப்பதாகும்.

இந்த மறுப்பை இலக்கியவாதிகள் பலரும் முன்வைத்து வருகின்றனர்!.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இனி அரசு போட்டித் தேர்வுகளில் தமிழ்மொழி பாடத்தாள் கட்டாயம் – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Admin

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்!

Admin

எதிர் கட்சிக்காரர்களால் என்னால் உறங்கவே முடியவில்லை: மாநிலங்களவை தலைவர் வெங்கைய நாயுடு கண்ணீர் பேச்சு!

Admin

போதை பொருள் கடத்திய திமுக நிர்வாகி நீக்கம் – யார் இந்த ஜாபர் சாதிக்?

Pamban Mu Prasanth

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கப்போவது கருணாநிதிக்கு தெரியும் – RTI தகவல்

Pamban Mu Prasanth

முனைவர் தொல்.திருமாவளவன் எழுதிய ’அமைப்பாய்த் திரள்வோம்’ – நூல் மதிப்புரை.

கோடநாடு விவகாரம்: சூடு பிடித்தசட்டப்பேரவை விவாதம்!

Admin

தேர்தலில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் 340% அதிகரிப்பு: தேர்தல் ஆணையம்.

அத்தைக்கு மீசை முளைக்கட்டும் .. கொங்கு நாடுவிவகாரம் குறித்து ஜெயக்குமார் கருத்து!

Admin

சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன் பேச்சால் அதிர்ச்சி

Admin

தமிழக அரசியல் நாகரிகம்… தப்பி ஓடும் எடப்பாடி பழனிசாமி? ஏன்?

Admin

தமிழக அரசின் திட்டத்தை கேலி செய்து… சர்ச்சை கார்டூன் வெளியிட்ட துக்ளக்!

Admin

Leave a Comment