கட்சி தொடங்கிய ஆந்திர முதல்வரின் சகோதரி..!

SHARE

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியான ஒய்.எஸ்.ஷர்மிளா புதிய கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார்.

மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் 72வது பிறந்தநாள் விழா நேற்று ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இதனை முன்னிட்டு புலிவேந்துலாவில் உள்ள ஒய்.எஸ்.ஆர் சமாதியில் ஜெகன் மோகன் ரெட்டி குடும்பத்துடன் அஞ்சலி செலுத்தினார்.

அதன்பின் அங்கிருந்து ஹைதராபாத்துக்கு வந்த ஜெகனின் சகோதரி ஒய்.எஸ். ஷர்மிளா ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சி என புதிய கட்சியை தொடங்கினார்.

மேலும் இளம் பச்சை மற்றும் நீல வர்ணத்தில் உள்ள கட்சி கொடியும் இந்நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் நடுவே தெலங்கானா மாநில வரைபடமும், மறைந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் படமும் இடம் பெற்றுள்ளது.

தெலங்கானா மாநிலம் உருவானதில் முதல்வர் சந்திரசேகர ராவின் குடும்பம் மட்டுமே இதனால் லாபமடைந்துள்ளதாகவும், ராஜசேகர ரெட்டியின் ஆட்சிக் காலம் ஆந்திராவின் பொற்காலம் என்றும் நிகழ்ச்சியின் பேசிய ஒய்.எஸ். ஷர்மிளா தெரிவித்தார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

டுவிட்டருக்கு லாஸ்ட் வார்னிங் கொடுத்த மத்திய அரசு

Admin

”கைலாசா நாட்டுக்கு ஐ.நா.சபையின் அங்கீகாரம் கிடைத்த விட்டது அன்பர்களே ”-நித்தியானந்தா பெருமிதம்!

Admin

என்னை கடன்காரர் என்று சொல்வதா? – கடுப்பான விஜய் மல்லையா

Admin

ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது “மேஜர் தயான்சந்த் விருது” எனப் பெயர் மாற்றம்..!!

Admin

மூன்றும் தோல்வி… மும்பை இண்டியன்ஸ்சிடம் பணிந்த சன்ரைசர்ஸ் அணி…

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி நடைமுறை என்ன?

Admin

தாத்தா பிறந்தநாளில் இறந்த பேரன்… சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பேரன் காலமானார்

Admin

ஃபான்டா ஆம்லேட் தெரியுமா? வைரலாகும் வீடியோ!

Admin

கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி: ம.பி.அரசு

மக்களவை தேர்தல் 2024: நீங்களும் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டுமா?

Admin

திருமணமான பெண்ணை மீண்டும் ஓடும் ரயிலில் மணந்த நபர்..வைரல் பதிவு!

Admin

பதவியை ராஜினாமா செய்கிறார் எடியூரப்பா..!!

Admin

Leave a Comment