அணை கட்டப்பட்டால் தமிழகம் பாலைவனமாகும்.. ஓபிஎஸ் அறிக்கை

SHARE

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டப்படுவதற்கான முயற்சியை தடுக்க தமிழக அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையிலும், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்த பிறகும், மேகதாதுவில் அணை கட்டப்படும் என கர்நாடக முதலமைச்சர் அறிவித்தது அதிர்ச்சியை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், அணை கட்டுவதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் கர்நாடகா எடுக்ககூடாது என்றும், கர்நாடகா அரசுக்கு மத்திய அரசு உரிய அறிவுரையை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், குடிநீர் வழங்கல் என்ற போர்வையில் மேகதாதுவில் அணைகட்டப்படும் என்ற கர்நாடக முதலமைச்சரின் அறிவிப்பு தமிழக மக்களையும், விவசாய மக்களையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அணை கட்டப்பட்டால் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறையும் என்றும், தமிழகம் பாலைவனமாகும் என ஓபிஎஸ் கூறியிருக்கிறார்.

மேலும் அணை கட்டுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என கர்நாடக முதலமைச்சர் கூறி வருவதற்கு அதிமுக கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ள ஓபிஎஸ், மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத வகையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின், சட்டப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பப்ஜி மதனின் யூடியூப் பக்கத்தை முடக்கிய காவல்துறை

Admin

கோயில் சொத்து ஆவணங்கள் இணையத்தில் பதிவேற்றப்படும்: அமைச்சர் அறிவிப்பு

சிவசங்கர் பாபாவை காவலில் எடுத்து விசாரிப்பதில் சிக்கல்… சிபிசிஐடி நீதிமன்றத்தில் தாக்கல்

Admin

ஆண்டுக்கு 28 லட்சம் சம்பளம் வாங்கியவர் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை! – காரணம் என்ன?

சிவசங்கர் பாபா மீது 300 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!

Admin

தேநீர் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி!

Admin

முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பில் குளறுபடி? சிங்காரவேலருக்கு புறக்கணிப்பா?

Admin

மின்வாரிய ஊழியர்களுக்கு புதிய காப்பீடு திட்டம்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Admin

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்!

Admin

வெளிநாடு தப்பிச்செல்ல திட்டமிட்ட சிவசங்கர் பாபா? ஸ்கெட்ச் போட்ட சிபிசிஐடி!

Admin

தனித்தமிழர்நாடு: மண்மீட்புக்கான வரைப‌டங்கள், சான்றுகள் மற்றும் சிந்தனைகளின் தொகுப்பு – நூல் அறிமுகம்

இரா.மன்னர் மன்னன்

கவனம் ஈர்க்கும் கரூர் மாவட்ட ஆட்சியர் … என்ன செய்தார் தெரியுமா?

Admin

Leave a Comment