புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட மத்திய அமைச்சரவையில் யார் யாருக்கு என்னென்ன பதவி என்ற தகவல் வெளியாகியுள்ளது.
.மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 43 அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.
இவர்களில் 15 பேர் கேபினட் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். இன்று பதவியேற்றவர்களில், 7 பேர் பெண்கள் மற்றும் எட்டு பேர் மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் யாருக்கு என்ன பதவி:
மீன்வளம், கால்நடை, பால்வளத்துறை, தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சராகியுள்ளார் தமிழக பாஜகவின் எல்.முருகன்.
தர்மேந்திர பிரதான்: கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
ஹர்தீப் சிங் புரி: பெட்ரோலியம் ஊரக வளர்ச்சி வீட்டு வசதித் துறை
பியூஷ் கோயல்: ஜவுளித் துறை மற்றும் நுகர்வோர் நலத்துறை
ஸ்மிருதி இராணி: பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மற்றும் தூய்மை இந்தியா திட்டம்
மன்சுக் மாண்டவியா: சுகாதாரம், உரம் மற்றும் ரசாயனத் துறை
அஸ்வினி வைஷ்ணவ்: ரயில்வே, தகவல் தொழில்நுட்பம், தொலைதொடர்பு அமைச்சர்
ஜோதிராதித்ய சிந்தியா: விமானப் போக்குவரத்து துறை
அனுராக் தாக்கூர்: தகவல் ஒலிபரப்புத் துறை
கிரண் ரிஜிஜூ: சட்டத்துறை
கிஷன் ரெட்டி: வடகிழக்குப் பிராந்திய வளர்ச்சி