தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அடுத்த 5 மாதத்திற்கு இலவசமாக கூடுதலாக 5 கிலோ அரசி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சாஸ்திரி பவனில் தென் மண்டல இந்திய உணவு கழக இயக்குனர் நசீம் மற்றும் தமிழக பொது மேலாளர் சைஜூ ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது மத்திய அரசு ரூ. 18க்கு நெல்லை கொள்முதல் செய்து, 1 கிலோ அரிசிக்கு ரூ.38 வரை செலவு செய்வதாகவும், அதனை மாநில அரசுகள் அரிசி ரூ.3க்கும், கோதுமை ரூ.2க்கும் விற்பனை செய்வதாகவும் தெரிவித்தனர்.
பிரதமரின் கரிப் கல்யாண் திட்டத்தின் கீழ் கொரோனா நேரத்தில் 80 கோடி மக்களுக்கு எப்போதும் வழங்கப்படும் 5 கிலோ அரிசியை விட கூடுதலாக 5 கிலோ அரசி வழங்கப்பட்டதாகவும், இந்த திட்டம் அடுத்த 5 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.
தமிழகத்திற்கு எப்போதும் 3 லட்சத்து 6 ஆயிரம் டன் வழங்கி வருவதாகவும், தற்போது பிரதமர் யோஜனா மூலம் 1 லட்சத்து 78 ஆயிரம் டன் கூடுதலாக வழங்குவதாக நசீம் தெரிவத்தார்.