மேகதாது அணை விவகாரம்.. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எடியூரப்பா கடிதம்

SHARE

மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, கர்நாடக முதல்வர் எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. அங்கு அணை கட்டப்பட்டுவிட்டால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது. இதனால், மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

சமீபத்தில் டெல்லி சென்ற முதல்வர் மு.க ஸ்டாலின் பிரதமரை சந்தித்து இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோரிக்கை மனு அளித்திருந்தார்.அதற்கு அடுத்தநாளே கர்நாடகாவுக்கு மேகதாது அணை மிக முக்கியம் எனவும், மத்திய அரசிடம் அனுமதி பெற்று அணையை கட்டுவோம் எனவும் கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறி சர்ச்சையை கிளப்பினார்.

இதையடுத்து, காவிரி ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்திலும் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் மேகதாது அணை கட்டும் பேச்சை தற்போது எடுக்க வேண்டாம் என்றும் தமிழக அரசின் அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்ட முடியாது என்றும் தமிழக அரசு சார்பில் பங்கேற்ற அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் மேகதாது அணை கட்டுவதால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாது எனவும், இரண்டு மாநில முதலமைச்சர் அல்லது அதிகாரிகளுடன் ஆலோசிக்க தயார் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரம்மபுத்திரா நதியில் படகுகள் மோதி விபத்து… காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரம்…

Admin

மக்களவை தேர்தல் தேதி நாளை அறிவிப்பு? இதையும் சொல்வாங்களா?

Admin

மேகதாது அணை கட்டப்படுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.. எடியூரப்பா

Admin

இந்திய பிரதமரை தவறாக சித்தரித்த யூ-டியூப் சேனல் மீது புகார்.!!!

Admin

பிரதமரை ஈர்த்த வீடியோ… இணையத்தில் வைரல்

Admin

8 சிங்கங்களுக்கு கொரோனா!

உச்ச நீதிமன்றத்திற்கு 9 நீதிபதிகள் பரிந்துரை.. நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்

Admin

ஒரே பூமி ஒரே ஆரோக்கியம்: ஜி 7 மாநாட்டில் பிரதமர் மோடி முழக்கம்

Admin

நாங்கள் இந்தியர்கள் யாரையும் கடத்தவில்லை ..தாலிபான்கள்!

Admin

மக்களவை தேர்தல் 2024: நீங்களும் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டுமா?

Admin

டெல்டா பிளஸ் வைரஸ்… தமிழக அரசுக்கு மத்தியஅரசு கடிதம்

Admin

முதலில் தயாரிக்கப்பட்டகோவாக்ஸின் தரமானதாக இல்லை :வல்லுநர் குழு தலைவர் அதிர்ச்சி தகவல்

Admin

Leave a Comment