இந்தியாவில் முதல் முறையாக டெல்டா பிளஸ் கொரோனா வகைக்கு ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
உருமாறிய கொரோனா வைரசான டெல்டா பிளஸ் கொரோனாவுக்கு இந்தியாவில் மகாராஷ்டிரம், கேரளம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 40 பேர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் டெல்டா பிளஸ் கொரோனா தொற்றுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உஜ்ஜைனில் உயிரிழந்த பெண் கொரோனா நோயாளியிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரியில் அவர் டெல்டா பிளஸ் கொரோனா வகையால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த மே 23 ஆம் தேதி உயிரிழந்தார்.
இவரைத் தவிர மத்தியப் பிரதேசத்தில் டெல்டா பிளஸ் கொரோனா வகையால் பாதிக்கப்பட்ட 4 பேரும் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது,