காவலர் தாக்கியதில் போதையில் இருந்தவர் பலியான விவகாரம் – தவறு செய்தோர் மீது நடவடிக்கை என முதல்வர் உறுதி!

SHARE

சேலத்தில் காவலர் தாக்கிய விவகாரத்தில் தவறு செய்தவர் யாராக இருந்தாலும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

சேலம் மாவட்டம் பாப்பநாயக்கன்பட்டியில் விவசாயி முருகேசன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ பெரியசாமி, காவலர் முருகன் ஆகியோர் மது போதையில் இருந்த முருகேசனை மறித்து வாகன சோதனை நடத்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் காவலர்கள் முருகேசனை தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் முருகேசன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரை தாக்கிய எஸ்ஐ தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இது குறித்து மு.க ஸ்டாலின் இன்று சட்டப் பேரவையில் காவல்துறையினரால் தாக்கப்பட்டு முருகேசன் என்பவர் உயிரிழந்தது குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன்.

தவறு செய்தது யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஐ.பி. எல் விளையாட்டு போல நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் நடனம் ஆடினார்கள்- அண்ணாமலை விமர்சனம்

Admin

வறுமையைப் போக்க வந்த நிறமே சிவப்பு’.. சங்கரய்யாவுக்குகமல்ஹாசன் வாழ்த்து!

Admin

தமிழ்நாடு பட்ஜெட் 2024: மதுரைக்கு மட்டும் 20 அறிவிப்புகளா! என்னென்ன அவை?

Pamban Mu Prasanth

மேதைகளின் மேதை அம்பேத்கர்! – பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை

தலைவர்களை புகழ்ந்து பேச தடை போட்ட முதல்வர்… காரணம் என்ன?

Admin

அவதூறான 130 வழக்குகள் ரத்து! எந்தெந்த தலைவர்கள் தெரியுமா?

Admin

’இதெல்லாம் தேவையில்லாத ஆணி’: திருமாவை எதிர்க்கும் முகநூல் வாசிகள்

Admin

‘யாரும் செய்யாததையா செய்தார்’ – கே.டி.ராகவனுக்கு சீமான் ஆதரவால் சர்ச்சை

Admin

ஜெயலலிதா பல்கலை., விவகாரம்…ஓபிஎஸ் உட்பட அதிமுக எம்எல்ஏக்கள் கைது…

Admin

தமிழ்நாடு பட்ஜெட் 2024 -25 என்னதான் சொல்கிறது? 116 குறிப்புகளில் முழு பட்ஜெட்

Admin

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்!

Admin

மாணவர் காங்கிரஸ், நளினி சிதம்பரத்தின் ஜூனியர், 3 முறை எம்.எல்.ஏ – யார் இந்த விஜயதரணி?

Pamban Mu Prasanth

Leave a Comment