மது போதையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் ஒருவர் காவலர்களிடம் தகராறு செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை கொண்டி தோப்பு காவலர் குடியிருப்பு அருகே போலீசார் வாகன சோதனையில் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது கார் ஒன்று அதிவேகமாக வந்து அரசு பேருந்து மீது மோதுவது போல் சென்றது.
உடனே இதனை பார்த்த போலீசார்விசாரணைக்காக காரில் இருந்த நபரை விசார்க்கும் போது அந்த நபர் மது போதையில் முககவசம் அணியாமல் இருந்துள்ளார்.
மேலும் காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் காவலர்களுடன் தான் ஒரு வழக்கறிஞர் என தகராறு செய்துள்ளார்.
இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் மதுபோதையில் இருந்த வழக்கறிஞர் மீது வழக்கு பதிவு செய்தார்.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் உள்ளவர் என்றும் அவர் பெயர் விஸ்வநாதன் என்பது தெரியவந்துள்ளது.
தற்போது வழக்கறிஞர் விஸ்வநாதன் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே வழக்கறிஞர் தனுஜா போலீசாரிடம் தகாத முறையில் பேசியதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.