பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டனை மட்டும் ஏன் கட்சியில் இருந்து நீக்கவில்லை? – என புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை நேற்று காலை பெங்களூரில் கைது செய்தனர்.
பின்னர் அமைச்சர் மணிகண்டன் சென்னைக்கு அழைத்து வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அண்மையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி, ‘பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி 6 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள மணிகண்டனை ஏன் கட்சியில் இருந்து இன்னும் நீக்கவில்லை.
இந்நேரம் ஜெயலலிதா இருந்திருந்தால் ஒரு நொடியில் அவரை தூக்கி இருப்பார்.
நடிகை சாந்தினியோடு மேலும் பல அமைச்சர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
தேவைப்பட்டால் இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியையும் அழைத்து விசாரிக்கத்தான் வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.