புதிய கல்வியாண்டு துவங்கியுள்ள நிலையில், ஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்கள் எத்தனை பேர்? என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் மத்திய அரசு விவரங்களை கேட்டுள்ளது.
கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது, இதனால் பள்ளி, கல்லூரிகள் தங்களது படிப்பை டிஜிட்டல் முறையில் கற்கின்றனர். தினமும் மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ள நிலையில், ஆன்லைன் வகுப்புகளில் அனைத்து மாணவர்களையும் பங்கேற்க வைக்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இதையடுத்து, ஸ்மார்ட் போன் இல்லாததால், ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க இயலாத மாணவர்கள் எத்தனை பேர்? என்று மாவட்ட வாரியாக தகவல் திரட்டி ஒப்படைக்குமாறு சமக்ரா சிக்ஷா மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களின் கல்வி தடைபடாமல் இருக்க விரைந்து பட்டியலை அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சமக்ரா சிக்ஷா மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து பட்டியல் கிடைத்த உடன், மத்திய, மாநில அரசின் நிதி உதவியைக் கொண்டு அரசுப்பள்ளி மாணவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பணியில் சமக்ரா சிக்ஷா ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.