“தமிழ் மொழி இனிமையான மொழி”.. சட்டப் பேரவையில் ஆளுநர் புகழாரம்

SHARE

திமுக ஆட்சி ஏற்றவுடன் சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உரையுடன் தொடங்கியுள்ளது.

சட்டமன்ற முறைப்படி சபாநாயகர் அப்பாவு ஆளுநரை வரவேற்றார். பின்னர் அவையில் பேசிய ஆளுநர், தமிழ் மொழி இனிமையான மொழி என புகாழாரம் சூட்டினார்.

மேலும்,தமக்கு வாக்களித்த, வாக்களிக்காத மக்கள் என்று பாரபட்சம் பார்க்காத இந்த அரசு சமூகநீதி, சமத்துவத்தை அடித்தளமாகக் கொண்ட அரசாக செயல்படும் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய ஆளுநர் தமிழை இந்திய அலுவல் மொழியாக்க தமிழக அரசு தொடர்ந்து பாடுபடும் என பேசினார்.

முதல்வருக்கு பாராட்டு:

மேலும்,முழு கவச உடை அணிந்து கொரோனா வார்டை பார்வையிட்டு முன்கள பணியாளர்களை ஊக்குவித்தார் முதல்வர் ஸ்டாலின். அரசியல் கட்சிகள் அனைத்தும் தோளோடு தோள் நின்று கொரோனாவை எதிர்த்து பணிபுரிகின்றனர்.

கொரோனா காலத்தில் மக்களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கியுள்ளது தமிழக அரசு. முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.335 கோடி நிதி குவிந்துள்ளது. நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை ஜூலை மாதம் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்:

மேலும், இன்றைய கூட்டத்தில் பேசிய ஆளுநர்.

வேளாண்துறைக்கு முக்கியத்துவம் அமைக்கும் வகையில் தனி பட்ஜெட் அமைக்கப்படும் என்றார். இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்களும் திருத்தங்களையும் மேற்கொள்ள மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தேவையான சட்டங்கள் இயற்றப்படும் என்றும் தெரிவித்தார்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சி.வை. தாமோதரம் பிள்ளை: தமிழுக்கு கிடைத்த கொடை – இலக்கிய வீதி நிகச்சியில் பெருமிதம்

Admin

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவச உணவு – அமைச்சர் அறிவிப்பு

சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு!

Admin

ராதாரவி மீது நடவடிக்கை எடுத்த ஸ்டாலின் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

Admin

முதல்வரிடம் ரூ.30 லட்சம் வழங்கினார் நடிகர் விக்ரம்

விவசாயம்… ஆட்டோ… மைக்… நாதகவின் அடுத்த சின்னம் குறித்து சீமான் சொன்னது என்ன?

Admin

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்: பரவாயில்ல இன்றும் அதே விலைதான்

Admin

தவறாகப் பரப்பப்படுகிறதா… சீமான் பேசியது என்ன?

Admin

இறக்குமதி வரியை குறைத்தால் போதும் : மதன்கெளரிக்கும் விளக்கம் கொடுத்த எலான் மஸ்க்

Admin

என்ன கொடுமை சார் இது… அரசு பேருந்தில் கியர் ராடுக்கு பதிலாக இரும்பு கம்பி

Admin

குற்றங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை… புதிய டிஜிபி சைலேந்திரபாபு

Admin

தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் தேதி அறிவிப்பு.!!

Admin

Leave a Comment