தமிழகத்தில் இவ்வளவு பேருக்கு டெல்டா வகை கொரோனா பாதிப்பா? அதிர்ச்சி தகவல் வெளியிட்ட சுகாதாரத்துறை

SHARE

தமிழகத்தில் இதுவரை 386 பேருக்கு உருமாற்றம் அடைந்த டெல்டா வகை கொரோனா தொற்று இருப்பதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழக சுகாதாரத் துறையின் சார்பில் தமிழகத்தில் தற்போது நிலவும் கொரோனோ இரண்டாவது அலை பரவல் மற்றும் அதன் தாக்கம் குறித்து சுகாதாரத் துறை வல்லுனர்கள் சார்பில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி இதுவரை 386 பேருக்கு உருமாற்றம் அடைந்த டெல்டா வகை கொரோனா தொற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில்,70 சதவீதம் B.1.617.2 என்ற டெல்டா வகை உருமாறிய கொரோனோ கண்டறியப்பட்டுள்ளது.

இது தவிர B.1.1.7 என அழைக்கப்படும் ஆல்பா வகை கொரோனோ 47 மாதிரிகளில் கண்டறியப்பட்டுள்ளது..

அதில் 12 வயதுக்கும் மேற்பட்டோரிடையே டெல்டா வகை கொரோனோ 81% மற்றும் 12 வயதுக்கும் குறைவான குழந்தைகளிடையே 19% கண்டறியப்பட்டுள்ளது.

சமூகப் பரவல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 30% மற்றும் குடும்ப பரவல் அடிப்படையில் 23% டெல்டா வகை கொரோனோ கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது

இதில், 12வயதுக்குட்பட்ட 96 குழந்தைகளும் அடங்குவர். இதில் 73 குழந்தைகள் டெல்டா வகை தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது

மேலும் 66 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தியவர்கள் என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 55 நபர்கள் டெல்டா நபர்கள் டெல்டா வகை தொற்றால் பாதிக்கபட்டிருப்பது தெரியவந்துள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

திருமண நிதியுதவித் திட்டம்… அரசின் அரைகுறை அறிவிப்பா?

Admin

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்!

Admin

ரூ.30,000 விலை போகின்றதா இந்த 5 ரூபாய் நோட்டு?

கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது!.

Admin

டெல்லியில் கிழிக்கப்பட்ட சுவரொட்டிகள் இணையத்தில் பரவின…

ஓ.பி.எஸ் மனைவி மாரடைப்பால் காலமானார்.!!

Admin

அன்போடு பார்த்துக்கொண்ட மருத்துவர்களுக்கு நன்றி – மூதாட்டியின் நெகிழ்ச்சி கடிதம்

Admin

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூடுங்கள்- தமிழக அரசு

Admin

தேர்தலில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் 340% அதிகரிப்பு: தேர்தல் ஆணையம்.

பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி பாலியல் தொல்லை விவகாரம்… தனியார் பள்ளிகளுக்கு கடிவாளம் போடப்படுமா?.

திமுகவிற்கு தோள் கொடுக்கும் அதிமுக எதற்கு தெரியுமா???

Admin

பேரவை அரங்கில் ஜெயலலிதா புகைப்படம் – சரியான நடவடிக்கையா?.

Leave a Comment