காஜியாபாத்தில், முதியவர் ஒருவர் தாக்கப்பட்ட விவகாரத்தில், டுவிட்டர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில், பாகிஸ்தானின் உளவாளி என கூறி முதியவர் ஒருவரை கும்பல் ஒன்று சரமாரியாக தாக்கியது. அப்போது அவரது தாடியை மழித்து, வந்தே மாதரம், ஜெய் ஸ்ரீராம் உள்ளிட்ட முழக்கங்களை முழங்கவும் அந்த கும்பல் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் காட்டுத் தீயாய் பரவி, பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், புதிய டிஜிட்டல் விதிகளுக்கு இணங்காமல், இத்தகைய தகவல்களை பதிவிட்டதோடு, அவற்றை அகற்றாமல் இருந்த டிவிட்டர் மீதும், கலவரத்தை தூண்டும் வகையிலான செய்திகளை வெளியிட்டதற்காக சில பத்திரிகையாளர்கள் மீதும் முதல் தகவல் அறிக்கையை உத்தரபிரதேச போலீசார் பதிவு செய்துள்ளனர். மொத்தம் 9 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்