கொரோனா தொற்று பாதித்த குழந்தைகளை வயது முதிர்ந்தவர்களிடம் நெருங்க அனுமதிக்க வேண்டாம் என ஆயூஷ் அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மரபணு மாறிய வைரஸால் முதியவர்கள் மட்டுமல்லாது குழந்தைகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், குழந்தைகளின் நலன் கருதி ஆயுஷ் அமைச்சகம் அவர்களுக்கென வழிகாட்டு நடைமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி குழந்தைகள் அடிக்கடி கைக்கழுவதை உறுதி செய்யும்படி பெற்றோரிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் கட்டாயம் முககவசம் அணியவேண்டும் என்றும், அதற்கு கீழான வயதினர் பெற்றோர் மேற்பார்வையில் தேவைப்பட்டால் அணிந்துகொள்ளலாம் என கூறியுள்ளது.
அதுமட்டுமல்லாது உடற்பருமன், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு தீவிரமாக இருக்கும் என்பதால், அவர்களுக்கு பெற்றோர் இயற்கையான ஆயூர்வேத மருந்துகளை பயன்படுத்துவதோடு, அடிக்கடி மருத்துவர்களுடன் தொடர்பில் இருந்து ஆலோசனைகளை பெற்று செயல்படலாம் எனவும் கூறியுள்ளது.