செல்ஃபி மோகத்திற்கு எதிராக அறிமுகமாகியுள்ளது பாப்பரஸி செயலி. இணையத்தை கலக்கி வரும் இதன் சிறப்புகளை காண்போம்.
சமூகத்தில் நிறைந்திருக்கும் செல்பி மோகம் நாம் எப்போதும் நன்றாக, அழகாக தோற்றம் தர வேண்டும் எனும் அழுத்தத்தில் நம்மை இழுத்துச் செல்கிறது என்றே சொல்லலாம். அதற்கு எதிராக புகைப்படம் எடுத்து பகிர்வதற்கான செயலியாக பாப்பரஸி உள்ளது.
இதன்மூலம் பயனாளர்கள் யாரும் தங்களை செல்ஃபி படம் எடுத்து பகிர்ந்து கொள்ள முடியாது. அதற்கு பதிலாக மற்றவர்கள் நம்மை எடுக்கும் படத்தைத் தான் பகிர முடியும்.
இதில் இணைய கிளப் ஹவுஸ் செயலி போல நண்பர்கள் துணை தேவை என்பது இங்கு குறிப்பிட வேண்டிய விஷயம்.
முதற்கட்டமாக ஐபோன்களில் செயல்படும் வகையில் அறிமுகம் ஆகியுள்ள பாப்பரஸி செயலி விரைவில் அனைத்து வித இயங்கு தளங்களிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
– மூவேந்தன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்