கொரோனா தொற்று நாட்டில் பரவ தொடங்கியது முதல் நாட்டு மக்களிடம் பலமுறை பிரதமர் மோடி உரையாற்றி உள்ளார். தற்போது கொரனோ 2-வது அலை பாதிப்பு குறைந்து வரும் சூழலில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பிரதமர் கூறியது என்ன?
பிரதமரின் உரையாடல் சுருக்கம்:
கொரோனா பெருந்தொற்றால் நமக்கு பிரியமான பலரை இழந்துள்ளோம். கொரோனா 2ஆவது அலைக்கு எதிராக இந்தியா போராடி வருகிறது. இந்த நவீன உலகம், இது போன்ற கொரோனா பெருந்தொற்றை கண்டதில்லை
{நன்றி ani}
ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா பாதிப்பும் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்தன. ரயில்கள், விமானங்கள், மூலம் ஆக்சிஜன் தேவை பூர்த்தி செய்யப்பட்டது. ஆக்சிஜன் தேவைக்காக பாதுகாப்புப் படையினரையும் பயன்படுத்தினோம்.
மனித குலத்தின் பெரும் எதிரி கொரோனா அதனை தடுக்க ஒரே பேராயுதம் தடுப்பூசி. இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை எதிர்த்துப் போராட தடுப்பூசி தான் உதவியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்துள்ளது.
நாட்டில், இதுவரை 23 கோடி டோஸ்களுக்கு அதிகமாக கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பூசிகளை உருவாக்குவதில், நமது நாட்டு விஞ்ஞானிகளை முழுமையாக நம்பினோம். கொரோனா தடுப்பு ஊசியை மூக்கு வழியாக செலுத்தும் ஆராய்ச்சி நடந்து வருகிறது.
இந்தியாவில் மேலும் 2 தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசியும் பரிசோதனையில் உள்ளது. தற்போது 7 நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசிகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
ஊரடங்கில் மாநில அரசு தளர்வு கொடுக்கும் போது, மத்திய அரசு வழிகாட்டுதல்களை கொடுக்கிறது – இவ்வாறு இன்று மோடி உரையாற்றினார்.
– மூவேந்தன்