வீட்டுக் கடன் வாங்கப் போகிறீர்களா?: ரிசர்வ் வங்கி சொல்வதைக் கேளுங்கள்…

SHARE

வீட்டுகடன் பெற விரும்பும் நபர்களுக்கான வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ளது. 

கொரோனா காரணமாக வீட்டுக் கடன் பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்ததையடுத்து, வீட்டுக் கடன் வட்டி விகிதங்களும் குறைந்தன. சமீபத்திய ஆண்டுகளில் வீட்டுக் கடன் வட்டி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், புதிய வட்டி விகிதங்கள் 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வட்டி விகிதங்களுக்கு நிகராக உள்ளன. அதனால் வீட்டுக் கடன் பெற விரும்பும் தகுதியான நபர்களுக்கு இது சரியான நேரமாக உள்ளது.

இந்த சூழலில் வீட்டுக்கடன் பெற விரும்பும் நபர்களுக்கான வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. இந்த வழிகாட்டுதல்களின்படி,

சொந்தமாக வீடு கட்டுதல், ஏற்கனவே கட்டப்பட்டு உள்ள தனி வீடு அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீட்டை வாங்குதல், இருக்கும் வீட்டை விரிவாக்குதல், வீட்டைப் புதுப்பித்தல், வீட்டில் பழுது பார்த்தல் – ஆகிய இந்த செயல்முறைகள் அனைத்துக்கும் வீட்டுக்கடன் பெறலாம்.

இப்படியாக வீட்டுக்கடன் பெற விரும்புபவர்கள் நிலத்தின் பத்திரம், பட்டா, சிட்டா, வில்லங்கச் சான்று ஆகியவற்றுடன் தங்களது இருப்பிடச் சான்று, கடந்த 6 மாத வங்கிப் பரிவர்த்தனை விவரங்கள், முந்தைய 3 ஆண்டுகளின்ன் வருமானவரித் தாக்கல் படிவம், ஃபார்ம் 16, வீட்டின் மதிப்பீட்டு அறிக்கை, லீகல் ஒப்பீனியன் ஆகியவற்றை அளிக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.

கேட்கப்படும் காரணம், அளிக்கப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் சரியாக இருந்தால், கடன் வாங்குபவருக்கு திருப்பி அளிக்கும் தகுதி உள்ளதா என்பதைப் பொருத்து வீட்டுக் கடன் அளிக்கப்படும்.

கடன் கேட்பவருக்கு குடும்ப வருமானம் உள்ளதா? நிரந்தர வருவாய் உள்ளதா?  குடும்ப சொத்துகள் உள்ளனவா? – என்பதையெல்லாம் பொருத்துதான், கடனை திருப்பி அளிக்கும் தகுதி தீர்மானிக்கப்படும்.

சொத்துப் பத்திரத்தைப் பிணையாக வைத்து வங்கிக் கடன் வழங்கப்படுவதைப் போலவே கடன் தொகைக்கு இணையான ஆயுள் காப்பீடு, கிஷான் விகாஸ் பத்திரம், தேசிய சேமிப்பு பத்திரம் ஆகியவையும் பிணைகளாக ஏற்கப்படும்.

வீட்டுக் கடனின் வட்டி விகிதமானது மாற்றங்களுக்கு உட்பட்டது. எனவே கடன் வாங்கும்போதும் பின்னரும் வட்டி விகிதம் குறித்து வங்கியிடம் பேசித் தெளிவு பெற வேண்டும்.

வீட்டுக் கடன்கள் நீண்ட காலக் கடன்கள் என்பதால் வட்டி விகிதத்தில் ஏற்படும் சிறிய மாற்றம் கூட பல லட்சம் ரூபாய்களை சேமிக்க உதவும். (வீட்டுக்கடன் வட்டி விகிதம் ஏறும் போது வட்டியை ஏற்றும் வங்கிகள், வீட்டுக்கடன் வட்டி விகிதம் குறையும்போது அப்படி செய்வது இல்லை. வாடிக்கையாளர் கேட்டால் மட்டுமே வட்டியைக் குறைக்கின்றன)

சொத்து மதிப்பில் அதிகபட்சம் 90% மட்டுமே வங்கிக் கடனாகக் கொடுக்கப்படும். எனவே மீதம் 10% தொகையை கடன் வாங்குபவர்தான் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். இது தவிர நடைமுறை கட்டணம், நிர்வாகச் செலவு, ஆவணப்படுத்தும் கட்டணம், தாமதக்கட்டணம், கடன் தவணையை மாற்றி அமைக்கும் கட்டணம், புதிய கடன் திட்டத்துக்கு மாறுவ தற்கான கட்டணம், சீரமைப்புக் கட்டணம், நிலையான வட்டியிலிருந்து மாறும் வட்டிக்கு மாறுவதற்கான கட்டணம், சட்ட ஆலோ சனை கட்டணம், தொழில்நுட்ப ஆய்வுக் கட்டணம், வருடாந்தர சேவைக் கட்டணம் ஆகியவை உள்ளன. வங்கிகளிடம் பேசினால் வாடிக்கையாளர்கள் இவற்றில் உரிய தள்ளுபடிகளைப் பெறலாம். 

வங்கிக் கடன் பெறக் கூடிய வாடிக்கையாளருக்கு வங்கியே கடன் தகவல் படிவத்தை சொந்த செலவில் அளிக்க வேண்டும். அந்தப் படிவத்தில் வட்டி விகிதம், கட்டணங்கள், செலவுகள் மற்றும் வட்டியை பாதிக்கும் அம்சங்கள் ஆகியவை விரிவாகக் குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும்.

வங்கிக் கடன் தொடர்பான அனைத்து ஆவணங்களின் நகல்களையும் கடன் பெறுபவருக்கு வங்கி அளிக்க வேண்டும்.

கடன் பத்திரத்தில் கையெழுத்து போடும் முன்னர் வாடிக்கையாளர் அதில் உள்ள தகவல்களை படித்துப் பார்த்து புரிந்து கொள்ள வேண்டும். பின்னரே கையெழுத்து போட வேண்டும். ஏதாவது சொற்களோ வாசகங்களோ புரியவில்லை என்றால் வங்கியில் அதற்கு உரிய விளக்கங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்ட பின்னரே கையெழுத்து போட வேண்டும்.

– ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ள இந்த வழிமுறைகள் மிகவும் முக்கியமானவை ஆகும். வீட்டுக் கடன் கொடுக்கும் வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் உரிய விளக்கங்களைக் கொடுக்காமலும், வட்டி விகிதத்தை குறைக்காமலும், அளவுக்கு அதிகமாக கட்டணங்களை விதித்தும் கொள்ளைகளில் ஈடுபடுவதாக நாடெங்கும் புகார்கள் எழுந்துள்ள இலையில், வாடிக்கையாளர்கள் எப்போதும் விழிப்போடு செயல்பட வேண்டியது அவசியமாகின்றது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவில் விளையாட்டு மாறவேண்டும் – தங்க மகன் நீரஜ் சோப்ரா ஆதங்கம்!.

எம்.எல்.ஏ.வா இருந்தா எனக்கென்ன? – கழிவு நீரில் நடக்க வைத்த மக்கள்

Admin

சர்வதேச யோகா தினம் ..திருக்குறளை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி

Admin

காலில் மாஸ்க்போட்ட அமைச்சர்.. வைரலாகும் புகைப்படம்

Admin

மேகதாது அணை கட்டப்படுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.. எடியூரப்பா

Admin

டெல்லியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை: காரணம் என்ன?

Admin

தடை விதித்த பிறகும் அச்சடிக்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள்… எவ்வளவு தெரியுமா?

Pamban Mu Prasanth

போலார்ட் அதிரடியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி!

தேர்தல் ஆதாயத்துக்காக வரலாற்றுப்பிழை செய்த பாஜக: எடப்பாடி பழனிசாமி காட்டம்

Pamban Mu Prasanth

தமிழகத்தை உளவு பார்க்க வந்துள்ளாரா..புதிய ஆளுநர்?

Admin

கேரளாவை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ் :பாதிப்பு எண்ணிக்கை15ஆக உயர்வு!

Admin

நீச்சல் உடையில் எங்கள் கொடியா ? அத்துமீறிய அமேசான் .. கொந்தளித்த கர்நாடக அரசு!

Admin

Leave a Comment