ஆதார் அட்டையைக் காரணம் காட்டி 3 கோடி ரேஷன் அட்டைகள் நீக்கமா?: விளக்கம் கேட்கும் உச்ச நீதிமன்றம்

SHARE

ரேஷன் அட்டைகளை ஆதார் எண்ணுடன் இணைக்கவில்லை என்பதற்காக 3 கோடி ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டன – என்ற குற்றச்சாட்டு உச்ச நீதிமன்றத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ஜார்ஜண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கொய்லி தேவி என்பவரின் சார்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கில், கொய்லி தேவியின் வழக்கறிஞர் கொலின் கோன்சால்வ்ஸ் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை மத்திய அரசு மீது முன்வைத்திருந்தார்.

தனது கட்சிக்காரர் கொய்லி தேவியின் ரேஷன் அட்டையானது ஆதார் எண்ணுடன் இணைக்கப்படவில்லை என்பதற்காக ரத்து செய்யப்பட்டதாகவும், இதனால் கொய்லி தேவியின் 11 வயதே ஆன மகள் சந்தோஷி குமாரி கடந்த 2017ல் பட்டினிச் சாவை சந்தித்ததாகவும் கூறிய அவர், இப்படியாக நாடெங்கும் ரத்து செய்யப்பட்ட 3 கோடி ரேஷன் அட்டைகளை மீட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார். 

மேலும், ஆதார் அட்டையுடன் இணைக்கப்படாத ரேஷன் கார்டுகளைப் போலியானவை என்று சொல்லி மத்திய அரசு நீக்கிவிட்டதாகவும், கிராமப்புறங்களில் இணையக் கோளாறு மற்றும் தொழில் நுட்பக் கோளாறுகளால் ஏற்படும் பாதிப்புகளைக் கணக்கில் கொள்ளாமல் மத்திய அரசு செயல்படுவதாகவும்  அவர் குற்றம் சுமத்தி இருந்தார்.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி ஷரத் ஏ. போப்டே தலைமையிலான அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்றத்தால் ஆதார் கட்டாயம் என்று ஏற்கப்படாத நிலையில், ஆதாரை சமர்பிக்காத 3 கோடி ரேஷன் அட்டைகளை நீக்கியது சரியா? – என்ற கேள்வி மீண்டும் முன்வைக்கப்பட, தலைமை நீதிபதி, ‘மூன்று கோடி ரேஷன் அட்டைகள் நீக்கப்பட்டனவா?’ என்று அதிர்ச்சியோடு கேட்டார்.

இந்த வழக்கில் மத்திய அரசுத் தரப்பில் வாதிட்ட கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அமன் லேகி, ரேஷன் கார்டு வழங்குவது மத்திய அரசின் கடமை அல்ல, மாநில அரசின் கடமை. எனவே மனுதாரர் மத்திய அரசுக்கு எதிராகத் தவறாக வழக்கு தொடர்ந்து உள்ளார் – என்று பதில் அளித்தார்.

மத்திய அரசின் தரப்பும் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டதை மறுக்கவில்லை என்பதால், இந்த வழக்கை பரிசீலிக்க உள்ளதாகவும், இது ஒரு தீவிரமான விஷயம் என்றும் கூறிய உச்சநீதிமன்றம், ‘ஆதாருடன் இணைக்கப்படாத ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டது குறித்து 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்’ – என மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.

நமது நிருபர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா வந்தாலும் மகிழ்ச்சி போகாது: 95 வயது பாட்டியின் வைரல் நடனம்!.

மக்களவை தேர்தல் தேதி நாளை அறிவிப்பு? இதையும் சொல்வாங்களா?

Admin

டெல்லியில் திரையரங்குகள் திறக்க அனுமதி!

Admin

பிரதமர் மோடியை சந்திக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

Admin

கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி..மத்திய அரசு முடிவு!

Admin

ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி!. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மிக மோசமான தோல்வி!.

ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு செபி ரூ.3 லட்சம் அபராதம்..!!

Admin

பவானிபூர் தொகுதியில் போட்டியிடுறார் மம்தா பானர்ஜி!.

ஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்கள் எத்தனை பேர்.? விவரம் கேட்கும் மத்திய அரசு

Admin

கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடம்!

விமானத்தில் தொலைத்த பெட்டிக்காக இண்டிகோ இணையதளத்தை ஹேக் செய்த இளைஞர்!

கர்நாடாக புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு! யார் இந்த பசவராஜ்?

Admin

Leave a Comment