பள்ளிகள் தொடர்ந்து நடைபெறும்: அதிகாரிகள் உறுதி!.

SHARE

சென்னை:

நமது நிருபர்.

9 முதல் 11ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை விடும் திட்டம் இல்லை என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.

கொரோனா தாக்கத்தால் சுமார் 10 மாதங்களாக முடங்கி இருந்த தமிழகத்தின் பள்ளிக் கூடங்கள் இந்த ஜனவரியில்தான் திறக்கப்பட்டன. தற்போது 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளில் பாடங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த சில தினங்களில் தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசு மேற்கொண்ட ஆலோசனைகளில் மக்கள் முகக் கவசங்களைக் கட்டாயம் அணிய வலியுறுத்தப்பட்டு உள்ளனர்.

இந்த சூழலால் 12ஆம் வகுப்பு தவிர பிற வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை அளித்து விடலாம் என்று ஆசிரியர் சங்கங்களும், பெற்றோர் ஆசிரியர் அமைப்புகளும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மறுபக்கம் விரைவில் 12ஆம் வகுப்பு மாணவர்களைத் தவிர பிறருக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என்றும், இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் பரவியும் வந்தன.

இது குறித்து இன்று விளக்கமளித்த தமிழக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், மாணவர்களுக்கு விடுமுறை அளிப்பது குறித்து எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை என்றும், இது தொடர்பான வதந்திகளை மாணவர்களும் பெற்றோரும் நம்ப வேண்டாம் என்றும் கூறினர்.

அத்தோடு, இப்போது மாணவர்களுக்கு நடத்தப்படும் பாடங்கள் அவசியமானவை என்பதால் பள்ளிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும், பள்ளிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன என்று அதிகாரிகள் விளக்கி உள்ளனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

நீட் விலக்கு மசோதா நிறைவேற்றம் – அதிமுக ஆதரவு, பாஜக வெளிநடப்பு!

Admin

நெல்லையில் ரூ.15 கோடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Admin

திருமண நிதியுதவித் திட்டம்… அரசின் அரைகுறை அறிவிப்பா?

Admin

ஐபிஎல்-லில் தனது முதல் ஆட்டத்தில் சி.எஸ்.கே. வெற்றியைத் தவறவிட்டது!

சே.கஸ்தூரிபாய்

யூடியூபர் வேட்பாளரானார்!.

Admin

ஸ்டூடண்ஸ் மனமோ நந்தவனமே .. பள்ளி, கல்லூரிகள் திறப்பு ..மாணவர்கள் உற்சாகம்!

Admin

தேநீர் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி!

Admin

பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி மீது நடிகை குட்டி பத்மினி புகார்!.

தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு!

Admin

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

Admin

அதிமுகவின் மகளிரணி செயலாளராக பா. வளர்மதி நியமனம்

Admin

செப்1. அங்கன்வாடிகள் திறப்பு… ஆனால், இப்படித்தான் இயங்க வேண்டும் : அரசு அறிவிப்பு

Admin

Leave a Comment