பிக் பாஸ் நாட்கள். நாள்: 10. தாமரை கடந்து வந்த பாதை…

SHARE

ஒன்பதாம் காலை 7 மணி. ஐக்கியும் அண்ணாச்சியும் பேசிக்கொண்டு இருந்தார்கள், ’பாலிடிக்ஸ்லாம் நடக்குதா?’ன்னு அண்ணாச்சி கேட்க, ’என்ன நடக்குதுன்னு எனக்கு புரியலை, கேம கேமா பாக்கணும், அப்புறம் மத்த நேரத்துல நாம நாமலா இருக்கணும், அதத்தான் மக்கள் பாக்குறாங்க… இதுல ஸ்டாடர்ஜி-க்கு என்ன வேலை?. ஒரு வேளை உன் ஸ்டாடர்ஜி என்ன அப்டின்னு கேக்குறதே ஸ்டாடர்ஜியா என்ன? எனக்கு புரியலை’-ன்னு சொன்னாங்க ஐக்கி. 

ஆனா எனக்கு ஒன்னு புரியலை, இன்னைக்கு பத்தாம் நாள்ன்னுதான வரும் என்ன பிக் பாஸ் ஒன்பதாம் நாளுன்னு சொல்றாரேன்னு யோசிக்குறேன், அப்புறம் சொல்றாரு பத்தாம் நாள் காலை எட்டு மணின்னு, பாவம் எடிட்டரே கன்ஃபியூஸ் ஆயிட்டாரு. பிறகு ரவுடி பேபியுடன் நாள் தொடங்கியது. 

அடுத்து கதை சொல்லட்டுமா டாஸ்க்குக்காக வந்தார் அபிஷேக். ஒரு படத்தை சொல்வது போல சொல்ல ஆரம்பித்தார், ஹீரோக்கு பில்டப் குடுக்குற மாதிரி அவருக்கு அவரே பில்டப் குடுத்து. தன் அப்பா கர்ணனாக கடன் கொடுத்து அந்த மன அழுத்தத்திலேயே இறந்தது, வெகுளியான அம்மா, அம்மாவுக்கு அப்பாவை தவிர வேறு எதுவும் தெரியாத்து. அப்பாவிற்கு பிறகு குடும்ப பொறுப்பை ஏற்றுக் கொண்ட அக்கா, தனக்கு தெரிந்ததெல்லாம் எண்டர்டெய்ன்மெண்ட்டா பேசுவ்து… என்று  ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பித்தார். இதில் நடுவே நிறைய சினிமா டயலாக்கெல்லாம் போட்டார்….. இவர் கதை சொல்லும் விதம் இவரோட சினிமா ரிவ்யூ மாதிரியே இருந்தது. 

தன்னுடைய திருமண வாழ்க்கை பிரச்சனையால், தன் அப்பா அம்மாவை கவனிக்க தவறியதை நினைத்து குற்ற உணர்ச்சியில் குறுகினார். அப்பாவால் இழந்த சொத்துக்களை மீட்டெடுத்தது, எல்லாமே போனதுக்கு அப்புறம் அதோட அருமை தெரிவது – எல்லாவற்றையும் சாதாரண இளைஞனின் வலியுடன் கூறியது யதார்த்தம். 

அடுத்து தாமரைச் செல்வியை பிக்பாஸ் அழைத்து, கரடியே காரித்துப்பின மொமெண்ட்டாக, ’நீங்க என்ன வேலை வாங்குறீங்க, நீங்க தலைவர் நீங்க வேலை சொல்லணும்… மத்தவங்க செய்யணும்’ என்று செல்லமாக அதட்டினார்.  

தாமரை வெளியே வந்து அதே மிடுக்குடன் சொல்ல, யார்ரா பேசுறது அப்டிங்குற மாதிரி தலையை தூக்கி பாத்துட்டு அவங்கவங்க வேலைய பாக்க போயிட்டாங்க. 

தாமரையும் இந்த ரியாஷன் தான் வரும்னு எதிர்பார்த்தாங்க போல கடைசியா, ’தலைவருக்கு மரியாதை குடுக்கணும்மாப்பா… பாத்து நடந்துக்கோங்க’…ன்னு கேப்புல கிடா வெட்டினாங்க தாமரை. 

அடுத்து கதை சொல்லட்டுமா டாஸ்க்க்கு வந்தவங்க வீட்டின் தலைவர் தாமரை. தாமரையின் வாழ்க்கை சராசரி பொண்ணின் வாழ்க்கையைப் போன்றதுதான். ஆனால் அவர் கடந்து வந்த பாதை நிறைய முட்கள் கொத்துக் கொத்தாக இருந்திருக்கின்றன. 

சோற்றுக்கே குடும்பம் கஷ்டப்பட்டது, குடும்பத்திற்கு உதவி செய்ய நாடகத்துறைக்கு சென்றது, பெண்ணாக நாடகத்துறையில் சந்தித்த கஷ்டங்கள், கூட நடிக்கும் நாடக கலைஞரை,  வருக்கு ஏற்கனவே திருமணம் நடந்திருந்தது தெரியாமல் காதலித்து திருமணம் செய்து கொண்டது, பிறகு அந்த திருமணத்தை முறித்து, இரண்டாம் திருமணம் செய்தது… என்று எல்லாவற்றையும் கூறினார்.

தன் கணவர் நல்லவர் என்றாலும் பொறுப்பற்றவர் என்றும், அந்த திருமணத்தில் பெரும் நம்பிக்கையே தன் மாமியார் என்று, பெருமிதத்துடன் கூறினார் தாமரை. முதல் திருமணம் முடிந்தாலும், அதன் மூலம் பிறந்த மகனை தன்னிடம் இருந்து பிரித்து கூட்டி சென்றுவிட்டதாகவும், அவனை பார்த்து பல மாதங்கள் ஆனதாகவும் கூறி அழுதார். 

பிறகு பிக் பாஸ் வாய்ப்பு வர, என்ன ஏதுன்னு தெரியாது இருந்தாலும் போலாம்ன்னு வந்தேன்னு கூறி முடித்தார் தாமரை. பெரும்பாலான ஹவுஸ்மேட்ஸ் லைக் தான் கொடுத்தார்கள் தாமரைக்கு. சில டிஸ்லைக்குகளும் வந்தன. 

இந்த பிக் பாஸ் வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம்தான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்னு பல இடங்களில் அவர் சொல்லியதன் பின்னிருந்த ஏக்கம், இவர் சொன்ன கதைக்குப் பிறகு புரிந்தது. தாமரையின் கதையால் நெகிழ்ந்த அபிஷேக், ’உன் மனசுக்கு நீ நல்லா இருப்ப, நீ பிக் பாஸ் டைட்டில் ஜெயிக்கணும்…’ என்று தன் வாழ்த்துகளை கூறினார். 

பாவ்னி தன் வாழ்க்கையை கதையையே எல்லோரிடமும் பேசிக்கொண்டிருந்தார், அதற்கு சமாதானம் கூறினார் இமான் அண்ணாச்சி. 

அடுத்து கதை சொல்ல வந்தவர் வருண்.. பிரபலங்களின் வாரிசுகள், பேரன்கள் படும் கஷ்டங்கள்தான் வருணுக்கும். நடிகர் ஐசரி வேலனின் பேரன். எம்ஜிஆரின் உதவியால் எங்க குடும்பம் பெரிய இழப்புகளை சந்திக்காமல் தப்பித்தது. வாரிசு நடிகர்கள் என்றாலே சினிமா வாய்ப்பு உடனே கிடைச்சிடும்னு நினைக்குறாங்க. ஆனா நான் ரொம்ப வருஷாமா சினிமா வாய்ப்புக்காக போராடிக்கிட்டு இருக்கேன் என்றும் கூறினார்… என் கதைக்கு லைக் போட்டா போடுங்க, போடலைன்னா போங்கன்னு அலட்சியமாக பேச, அனைவருமே டிஸ்லைக் கொடுத்தனர் வருணுக்கு. தவளை தன் வாயால் கெடும்.

– சே.கஸ்தூரிபாய்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

”மரணத்துக்கு முந்தைய அமைதி!” மரணத்தின் விலை – தொடர். அத்தியாயம் 1.

இரா.மன்னர் மன்னன்

திருமணமான பெண்ணை மீண்டும் ஓடும் ரயிலில் மணந்த நபர்..வைரல் பதிவு!

Admin

பெரும் வரவேற்பைப் பெற்ற அனபெல் சேதுபதி டிரைலர்

பிக் பாஸ் நாட்கள். நாள் 25. ‘அடக்கம்… அடக்கம்… அடக்கமோ அடக்கம்!’

சே.கஸ்தூரிபாய்

அதுக்குள்ள அடுத்த வைரஸா… மிரட்டும் “ஸ்க்ரப் டைபஸ்”

Admin

இங்க பாரு செல்லம்..இப்படித் தான் படியேறனும்.. குட்டிக்கு கிளாஸ் எடுத்த தாய் பூனை

Admin

காவல் ஆணையருக்கு வீடியோ அனுப்பி தற்கொலை மீரட்டல் விடுத்த சூர்யா தேவி

Admin

கிராமத்துக்காரி – இது 90களின் உலகம் – பகுதி 4: ”போர்வெல் பேயி!”

“தல-தளபதி” சந்திப்பு – இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்

Admin

ட்விட்டரைக் கலக்கும் புறக்கணிப்போம் புதியதலைமுறை

Pamban Mu Prasanth

பிக்பாஸ் நாட்கள். நாள் 14: “முதல் விக்கெட் நாடியா”

இரா.மன்னர் மன்னன்

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி: 9. ’24 வகை தொழிற்கை முத்திரைகள்’ – ஒரு நினைவூட்டல்.

Leave a Comment