காபூலில் பெண்கள் நடத்திய போராட்டம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக 2 பத்திரிகையாளர்கள் மீது தலிபான்கள் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் ஆப்கன் ராணுவ படைக்கு உதவி வந்த அமெரிக்க படை அந்நாட்டை விட்டு வெளியேறியது.
இதனையடுத்து ஆப்கானிஸ்தானை தங்களின் கட்டுக்குள் கொண்டு வந்த தாலிபான்கள், ஆட்சியை கைப்பற்றின. இதில் பெண்களுக்கு இடமளிக்க தலிபான்கள் மறுத்துள்ள நிலையில் ஆட்சி அதிகாரத்தில் தங்களுக்கும் பங்களிக்க கோரி பெண்கள் காபூல் வீதிகளின் இறங்கி போராடி வருகின்றனர்.
அவர்களது போராட்டம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக 2 பத்திரிகையாளர்களை கைது செய்த தலிபான்கள் அவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கொடூர தாக்குதளுக்கு உள்ளான 2 பத்திரிகையாளர்களும் ரத்த காயங்களுடன் தோற்றமளிக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை அமெரிக்க பத்திரிகையாளர் மார்கஸ் யாம் என்பவர் தனது இணைய பக்கத்தில் பகிர்ந்துள்ளார்