ஜம்மு-காஷ்மீரில், நிறைமாத கர்ப்பிணியான மருத்துவர் ஒருவர் தொடர்ந்து கொரோனா நோயாளிகளுக்கு சேவையாற்றி வருகிறார்.
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்த போது , பலர் தீவிர தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் கர்ப்பணி மருத்துவர்களும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
ஆனால் இதில் தொற்று பாதித்து சுமார் 650 மருத்துவர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், பல்வேறு மாநிலங்களில் கர்ப்பிணி மருத்துவர்களுக்கு கொரோனா தடுப்பு பணியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
கத்துவாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஷிவானி என்ற 8 மாத கர்ப்பிணி மருத்துவர் ஒருவர் தொற்றின் தீவிரத்தையும் பொருட்படுத்தாது தொடர்ந்து கொரோனா நோயாளிகளுக்கு சேவை செய்து வருகிறார்.
தற்போதைய இந்த நிலை தனக்கு சற்று மனஅழுத்ததை கொடுத்தாலும், மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக அதனை தான் செய்து வருவதாகவும், இதில் தனக்கொன்றும் பிரச்னை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.