கடந்த ஆட்சியில் தீபாவளிக்காக ராஜேந்திர பாலாஜி ஒன்றரை டன் இனிப்புகளை ஆவினில் இருந்து பெற்றுள்ளதாக அமைச்சர் சா.மு.நாசர் குற்றச்சாட்டியுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆவின் பால் விற்பனை மையங்களில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று ஆய்வு மேற்கொண்டார். ஆவின் முகவர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அதன்பிறகு, சேலம் ஆவின் பால் பண்ணையிலும் ஆய்வு நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நாசர் தமிழகத்தில் தற்போது பால் வரத்து 1.5 லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளது அதேபோல் விற்பனையும் ஒன்றரை லட்சம் அதிகரித்துள்ளதாக கூறினார்.
அதே சமயம் கடந்த ஆட்சியில் ஆவின் மோசடியில் நடந்த மோசடி மட்டும் 234 கோடி எனவும். இதில் ஆவின் பால்பண்ணையில் பெரிய ஊழல் நடந்துள்ளதாக கூறினார்.
மேலும், கடந்த ஆட்சியில் ராஜேந்திரபாலாஜி வீட்டுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 1.5 டன் அதாவது 1,500 கிலோ ஆவின் ஸ்வீட் இலவசமாக அனுப்பப்பட்டுள்ளதாகவும் இதற்கான ஆதாரம் சிக்கியுள்ளதால் தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என கூறினார்.