மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-15ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, வேலை வாங்கி வருவதாக, கூறி 81 பேரிடம் ரூ.1.62 கோடி மோசடி செய்ததாக கணேஷ்குமார், தேவசகாயம், அருண்குமார் உள்ளிட்டோர் சென்னை காவல் ஆணையரிடம் அளித்த புகார் அளித்தனர்.
இதன் அடிப்படையில், செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு போலீசார் மூன்று வழக்குகளை பதிவு செய்துள்ளனர். ஒரு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராவதில் அமைச்சர் செந்தில் பாலாஜி உயர் நீதிமன்றத்தில் விலக்கு பெற்றுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்