காஜியாபாத்தில் இளம்பெண் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
காஜியாபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பெண் ஒருவர், பால்கனி அருகே நின்று கொண்டிருந்தபோது திடீரென நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அங்கிருந்த தடுப்பினை அப்பெண் பிடித்துக்கொண்டு சத்தமிட்டுள்ளார்.
இந்தநிலையில் அவரது சத்தம் கேட்டு ஓடோடி வந்த அவரது கணவர், பெண்ணின் கையை பிடித்து மீட்க முயற்சி செய்தார்.
ஆனால் அவரது பிடியிலிருந்து நழுவிய அப்பெண் கீழே விழுந்து படுகாயமடைந்தார். இந்தநிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் இளம்பெண்ணின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்