கணவனே கண்கண்டதெய்வம்..கோவில் கட்டி பூஜை செய்யும் மனைவி.!!

SHARE

விபத்தில் உயிரிழந்த தனது கணவரின் நினைவாக, மனைவி அவருக்கு கோவில் கட்டி பூஜை செய்து வழிப்பட்டு வரும் நெகிழ்ச்சி சம்பவம் ஆந்திரா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

ஆந்திரா மாநிலம் பிரகாசம் மாவட்டம் அருகே விவசாயம் செய்து வந்த தம்பதி அங்கி ரெட்டி- பத்மாவதி. கடந்த 4 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட கார் விபத்தில் கணவர் அங்கி ரெட்டி பரிதாபமாக உயிரிழந்தார். கணவரின் உயிரிழப்பிற்கு பின் விவசாய பணிகளை அவரது மகன் மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் மறைந்த கணவனின் நினைவாகவே இருந்த மனைவி பத்மாவதியின் கனவில் வந்த அவரது கணவர், தனக்கு கோவில் கட்ட சொன்னதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தனது கணவருக்கு கோவில் கட்ட வேண்டும் என்ற விருப்பத்தை தனது மகனிடம் கூறியுள்ளார் தாய் பத்மாவதி. மகனும் தாயின் விருப்படியே விவசாய நிலத்தில் மறைந்த தந்தையின் சிலையை நிறுவி கோவில் கட்டி கொடுத்துள்ளார்.

அதனைதொடர்ந்து தினமும் கணவரின் சிலைக்கு பூஜை செய்து வழிபட்டு வரும் மனைவி பத்மாவதி, கணவரின் பிறந்த நாள், நினைவு நாள் மற்றும் பவுர்ணமி ஆகிய தினங்களில் ஏழை எளியவர்களுக்கு அன்னதானமும் வழங்கி வருகிறார். கணவனே கண்கண்டதெய்வம் என்று கோவில் கட்டி பூஜை செய்யும் பத்மாவதியின் இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பாஜக அலுவலகம் கட்ட வைக்கப்பட்ட கல்லினை பிடுங்கி எறிந்த விவசாயிகள்

Admin

கொரோனாவால் இறந்தவர்களுக்கு 4 லட்சம் .. சாத்தியமற்றது – மத்திய அரசு

Admin

24 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தம்

Admin

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிதான வெற்றி!.

சே.கஸ்தூரிபாய்

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய டெல்லி!

நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்கள் கவலை தருகிறது: தலைமை நீதிபதி பேச்சு!

Admin

காலில் மாஸ்க்போட்ட அமைச்சர்.. வைரலாகும் புகைப்படம்

Admin

கர்நாடாக புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு! யார் இந்த பசவராஜ்?

Admin

தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா!

Admin

“மிகப்பெரிய திட்டம் வருது” … மோடியின் சுதந்திர தின உரையில் வெளியான அறிவிப்பு

Admin

8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்… குடியரசுத் தலைவர் அறிவிப்பு

Admin

இந்துக்களும் முஸ்லீம்களும் தங்களை ஆதிக்க சக்தியாக நினைத்துக்கொள்ள வேண்டாம் …!

Admin

Leave a Comment