மக்களின் பொருளாதார வல்லுநர்… யார் இந்த ஜெ.ஜெயரஞ்சன்?

SHARE

தமிழக வளர்ச்சி கொள்கைக் குழுவின் துணை தலைவராக ஜெ.ஜெயரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. யார் இந்த ஜெ. ஜெயரஞ்சன்? – விரிவாகப் பார்ப்போம்…

பொருளாதார நிபுணரும் பேராசிரியருமான ஜெ.ஜெயரஞ்சன் மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரக் கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். கிராம இயக்கவியல் குறித்து ஆய்வு செய்து சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். 

புதுவையில் 4 ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணியாற்றிய பின்னர், 1983ஆம் ஆண்டில் சென்னைக்கு இடம் பெயர்ந்த இவர், தொடர்ந்து பல பெரிய நிறுவனங்களில் மூத்த ஆய்வாளராகப் பணியாற்றி உள்ளார்.

தமிழில் பல்வேறு ஊடகங்களில் கட்டுரைகளை எழுதியும், பேட்டிகள் கொடுத்தும் தனது கருத்தை வெளிப்படுத்தி வருபவர் ஜெ.ஜெயரஞ்சன். தமிழ் ஊடகங்களைப் போலவே ஆங்கில ஊடகங்களுக்கும் தொடர்ந்து நேர்காணல்களை அளித்து வருகிறார். 

பொருளாதாரம் குறித்த பல சர்வதேச இதழ்களில் இவரது ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. கடந்த தேர்தலின்போது தமிழகம் வந்த ராகுல் காந்தியின் உரையை இவரே மொழி பெயர்த்தார்.

இவரது ஆய்வுக் கட்டுரைகள் பெரும்பாலும் கள ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டவை. எளிய மக்கள் சந்தித்த ஏற்ற இறக்கங்களைப் பதிவு செய்யக் கூடியவை. இவரது ஆய்வுகளின் பின்னே உள்ள உழைப்பு மலைக்க வைக்கக் கூடியது. குறிப்பாக டெல்டா பகுதியில் மக்கள் எப்படி நிலங்களை இழந்தார்கள்?-என்பதை இவர் தானே நேரில் சென்று ஆய்வு செய்த விதத்தையும் நூலாக்கிய நேர்த்தியையும் சொல்லலாம்.

இவரது பேச்சும் எழுத்தும் எளிமையானவை, அனைவருக்கும் புரியக் கூடியவை. ‘அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க… இவ்வளவுதான்’ – என்று எளிய சொற்களில் இவர் பொருளாதாரத்தை விளக்கும் முறை நேர்த்தியானது. தமிழகத்தில் அண்ணாவுக்குப் பின்னர் மக்களுக்குப் புரியும் வகையில் பொருளாதாரத்தை விளக்கியவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. இவரது குட்டிக் கதைகள் இணையத்தில் பல லட்சம் பார்வைகளைப் பெற்று உள்ளன.

ஜெ.ஜெரஞ்சனின் இன்னொரு முகம் ரசனைக்காரர் என்பது. ‘விண்ணைத் தாண்டி வருவாயா’-படத்தில் வரும் கதாநாயகியின் வீடு உண்மையில் இவரது வீடுதான். இந்த வீட்டை தற்செயலாகப் பார்த்த இயக்குநர் கவுதம் மேனன் இவரது அனுமதியைப் பெற்று படத்தில் பயன்படுத்தினார் – என்பது குறிப்பிடத் தக்கது.

ஜெ.ஜெயரஞ்சன் எழுதிய பிரபல நூல்கள்:

இந்தியப் பொருளாதாரம்: கட்டுக்கதைகள்

தமிழ்நாட்டின் மணற்கொள்ளை அரசியல்

கறுப்புப் பணமும் செல்லாத நோட்டும்

ஜெ.ஜெயரஞ்சன் கட்டுரைகள்

தமிழகத்தில் நிலப் பிரபுத்துவம் வீழ்ந்த கதை

திராவிட ஆட்சி: மாற்றமும் வளர்ச்சியும்

  • சுடரொளி

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

என்ன மத்திய அமைச்சரவையில் 42% அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்கா? வெளியான அதிர்ச்சி தகவல்!

Admin

மாற்றத்திற்கான பட்ஜெட்டை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சுகிறது: கமல்ஹாசன்

Admin

மேற்கு வங்க அரசியல்: 42 தொகுதிகளுக்கு, வேட்பாளர்களை அறிவித்த மமதா பானர்ஜி

Admin

மாணவிக்கு கொரோனா… ஒட்டுமொத்த ஸ்கூலுக்கும் சோதனை

Admin

ஓபிஎஸ் இபிஎஸ் அதிரடி.. சசிகலாவுடன் தொலைபேசியில் பேசியோர், புகழேந்தி அதிரடி நீக்கம்

Admin

முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பில் குளறுபடி? சிங்காரவேலருக்கு புறக்கணிப்பா?

Admin

இந்தியாவில் சுற்றுச்சூழல் அமைச்சகம் உருவாகக் காரணமான சுந்தர்லால் பகுகுணா மறைந்தார் – யார் இவர்?

“தெய்வம் நின்று கொல்லும்” – கே.டி.ராகவன் விவகாரத்தில் கடுப்பான காயத்ரி ரகுராம்

Admin

மேலும் பல தளர்வுகளுடன் ஊரடங்கு ஒரு வாரம் நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு

Admin

இஸ்ரேலில் முடிவுக்கு வந்தது 12 வருட நெதன்யாகு ஆட்சி ..புதிய பிரதமராக பதவியேற்றார் நப்தாலி பென்னட்!

Admin

காளைகளைக் காப்பாற்றினோம்… யானைகளை?: அழிவின் விளிம்பில் தமிழர் செல்வம்!.

Admin

தமிழகத்தை அதிர வைத்த ‘சோளகர் தொட்டி’ – நாவல் மதிப்புரை

Leave a Comment