ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் குவித்த படங்கள் எவை? – பட்டியல் இதோ…

SHARE

திரைப்படத் துறையின் உயரிய சர்வதேச விருதாகக் கருதப்படுவது ஆஸ்கர் விருது. 93ஆவது ஆஸ்கர் விருதுகளை வழங்கும் விழா இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் நடக்க இருந்தது, பின்னர் கொரோனா காரணமாக தள்ளிப் போடப்பட்டு நேற்று நடைபெற்றது.

லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா

நிகழ்ச்சித் தொகுப்பாளர் இல்லாமல் நடைபெற்ற இந்த விழாவில் திரைப்படம் சார்ந்த 23 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டன.

நோமேட்லாண்ட் திரைப்படம் விருதுகளை வாரிக் குவித்தது. சிறந்த திரைப்படம் விருது இந்தப் படத்திற்கு வழங்கப்பட்டது, சிறந்த இயக்குநருக்கான விருதை இந்தத் திரைப்படத்தின் இயக்குநர் க்ளோயி சாவ் பெற்றார், சிறந்த நடிகைக்கான விருது இதே திரைப்படத்தில் நடித்த பிரான்சஸ் மெக்டார்மண்ட்-க்கு வழங்கப்பட்டது. இப்படியாக மூன்று முக்கிய விருதுகளை இந்தத் திரைப்படம் வென்றது. 

பிளாக் பாட்டம் திரைப்படம் 2 ஆஸ்கர் விருதுகளை வென்றது. சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் பிரிவில் இந்தத் திரைப்படத்திற்காகப் பணியாற்றிய லோபஸ் ரிவேரா, மியா நில், ஜமிகா வில்சன் ஆகியோர் ஆஸ்கர் வென்றனர். ஆடை வடிவமைப்பு பிரிவில் அன் ரோத் ஆஸ்கர் வென்றார்.

தி பாதர் திரைப்படம் சிறந்த நடிகர் (அந்தோணி ஹாப்கின்ஸ்), சிறந்த தழுவல் திரைக்கதை (கிறிஸ்டோபர் புளோரியன்) ஆகிய பிரிவுகளில் 2 ஆஸ்கர் விருதுகளை வென்றது.

சவுண்ட் ஆஃப் மெட்டல் திரைப்படம் சிறந்த படத்தொகுப்பாளர் (மைக்கேல் நெல்சன்), சிறந்த ஒலி அமைப்பு (நிகோலஸ் பெகர், ஜேமி பக்‌ஷித், மிட்சல் கவுட்டோலென், கார்லஸ் கார்டெஸ், பிலிப் பிலாத்) ஆகிய பிரிவுகளில் ஆஸ்கர் வென்றது.

சோல் திரைப்படம் சிறந்த அனிமேஷன் படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது. சிறந்த பின்னணி இசைக்கான ஆஸ்கர் விருது இந்தத் திரைப்படத்தில் பணியாற்றிய ட்ரெண்ட் ரென்சர், அட்டிகஸ் ராஸ், ஜான் படிஸ்டி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை மங்க் திரைப்படத்திற்காக எரிக் மெசர்ச்மிட் வென்றார். சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான விருதை அதே படத்தில் பணியாற்றிய டொனால்டு கிரஹாம் பர்ட், ஜன் பாஸ்கல் வென்றனர்.

சிறந்த திரைக்கதைக்கான விருதை பிராமிசிங் யங் வுமன் படத்தில் பணியாற்றிய எமரால்டு பென்னல் வென்றார். சிறந்த பாடலுக்காக ஆஸ்கர் விருதை ’பைட் ஃபார் யூ’ பாடல் வென்றது.

சிறந்த துணை நடிகராக  ஜூடாஸ் அண்ட் தி பிளாக் மெசியா படத்தில் நடித்த டேனியல் கல்லூயாவும், சிறந்த துணை நடிகையாக  மினாரி படத்தில் நடித்த யூ ஜங் யூன்-னும் அறிவிக்கப்பட்டனர்.

மேலும், சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதை  மை ஆக்டோபஸ் டீச்சர் படமும், சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கர் விருதை  அனதர் ரவுண்ட் – என்ற டச்சு திரைப்படமும், சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை இஃப் எனிதிங் ஹேப்பன்ஸ் ஐ லவ் யூ படமும், சிறந்த ஆவணக் குறும்படத்திற்கான விருதை  கோலெட் படமும், சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம் விருதை  ட்ரூ டிஸ்டேன்ட் ஸ்ட்ரேஞ்சர் படமும் பெற்றன.

கிறிஸ்டோபர் நோலனின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படைப்பான டெனட் திரைப்படம் சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்க்கான விருதைப் பெற்றது, அதை ஆண்ட்ரு ஜாக்சன், டேவிட் லீ, ஆண்ட்ரூ லாக்லே, ஸ்காட் பிஸ்சர் பகிர்ந்து கொண்டனர்.

  • நமது நிருபர்.

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனாவால் இணைந்த ஜோடி: பாலிவுட்டில் ருசிகரம்

Admin

விரைவில் “மாநாடு” பட டிரெய்லர்… உற்சாகத்தில் ரசிகர்கள்…

Admin

உலகின் மூன்றாவது சிறந்த திரைப்படம்!: சாதித்த ‘சூரரைப் போற்று’

கொஞ்சம் காதலால் : வைரலாகும் கியரா அத்வானி வீடியோ!

Admin

குழந்தையின் சிகிச்சைக்காக பதக்கத்தை ஏலம் விட்ட போலந்து வீராங்கனை.!!

Admin

ஆட்டோவில் செல்லும் அஜித்: இணையத்தைக் கலக்கும் வீடியோ

Admin

ஆஸ்கரை அதிரவைத்த பெண் இயக்குநர்!.

ஹாரி-மேகன் தம்பதியின் இரண்டாவது குழந்தைக்கு இந்த பெயரா? – மகிழ்ச்சியில் இணையவாசிகள்.

Admin

இஸ்ரேலில் முடிவுக்கு வந்தது 12 வருட நெதன்யாகு ஆட்சி ..புதிய பிரதமராக பதவியேற்றார் நப்தாலி பென்னட்!

Admin

சமூக வலைத்தளங்களில் இருந்து விலகினார் அமீர் கான்!

Admin

சார்ஜர் இல்லை: ஆப்பிள் நிறுவனத்துக்கு 20 லட்சம் டாலர் அபராதம் விதித்த பிரேசில்!.

Admin

யூடியூப்பை தெறிக்கவிடும் ‘ரவுடி பேபி’ – 5 மில்லியன் லைக்ஸ் பெற்று புதிய சாதனை!

Admin

Leave a Comment