தமிழகத்தில் மின்தடைக்கு காரணம் மின்கம்பிகளில் அணில்கள் ஓடுவதால் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கிண்டல் செய்துள்ளார்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் சில மணி நேரங்கல் மின்தடை ஏற்பட்டது
இது குறித்து சமீபத்தில் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி :
‘கடந்த சில மாதமாக மின்வாரிய பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாததால், மின்கம்பிகளில் கொடிகள் படர்ந்துஅணில்கள் ஓடுவதாலும் மின்தடை ஏற்படுகிறது’ என கூறினார்.
அமைச்சரின் இந்த பேச்சு இணையத்தில் பேசு பொருளானது இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் விளக்கத்தை விமர்சித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில்:
மின் கம்பிகளில் கொடி படர்ந்து அணில்கள் ஓடுவதால் மின் தடை ஏற்படுகிறது: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகிறார்.
சென்னையில் அடிக்கடி மின் தடை ஏற்படும் மர்மம் என்ன?
ஒருவேளை சென்னையில் அணில்கள் பூமிக்கு அடியில் ஓடுகின்றனவோ?’ என கிண்டலாய் கேள்வி எழுப்பியுள்ளார் ராமதாஸ்.