இன்று சட்டசபையில் மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வரும் 12 ஆயிரம் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சிலை தயாரிக்கும் 3 ஆயிரம் தொழிலாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
மேலும் சட்டசபையில் பா.ஜ., எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் விநாயகர் சதுர்த்தி வழிபாடு குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின் :
கொரோனா பரவல் காரணமாக வரும் 30ம் தேதி வரை மக்கள் கூடும் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஆகவே கொரோனா பரவலைக் கட்டுக்குள் வைத்திருக்க பொதுஇடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கவும், ஊர்வலத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.