கப்பல் என்ன அவங்க நாட்டு சொத்தா? வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்தநாள் இன்று

SHARE

இந்தியாவின் முதல் சுதேசிக்கப்பல், சுயசார்பு இந்தியா ‘வின் முன்னோடித் தமிழராக புரட்சி செய்த கப்பலோட்டிய தமிழன் வ . உ . சிதம்பரனாரின் 150 வது பிறந்தநாள் இன்று அவரை பற்றி விளக்குகின்றது இந்த தொகுப்பு.

‘’வ . உ . சியின் பிரசங்கத்தை கேட்டால் செத்த பிணம் கூட உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்’’

இதனை கூறியது நம் மக்கள் அல்ல1908ஆம் ஆண்டு சிதம்பரனாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கிய தீர்ப்பில் நீதிபதி ஃபின்ஹே எழுதியுள்ள வரிகள்தான் இவை.

வ.உ.சி.யின் விடுதலை உணர்வுக்கும், அவரின் தியாக வாழ்க்கைக்கும் இந்த வார்த்தைகளை விடவும் பெரிய சான்று எதுவும் தேவையில்லை.

1872ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் உலகநாத பிள்ளை, பரமாயி அம்மாளுக்கு மூத்த மகனாக பிறந்தவர் வ.உ.சி.

இளம் வயதிலேயே தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நற்புலமை பெற்ற வ.உ.சி, தந்தையின் வழியில் வழக்கறிஞராகவும் படித்து தேர்ச்சி பெற்றார்.

சுதந்திர போரட்டத்தின் போது பாலகங்காதர திலகரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு சுதந்திர போராட்டத்தின் தன்னை இணைத்துக்கொண்ட வ.உ.சிக்கு பாரதியார், சசி மகராஜ் ராமகிருஷ்ணானந்தர், சுப்ரமணிய சிவா ஆகியோர் நல்ல நண்பர்களாக இருந்தனர்.

வ.சி.சிதம்பரனாரின் குரல்முழக்கம் பல்லாயிரக்கணக்கான சாமானிய மக்களுக்கு விடுதலை உணர்வையூட்டியது.தூத்துக்குடியிலும், திருநெல்வேலியிலும் மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவராக விளங்கினார்.

மக்களிடம் விடுதலை உணர்வு, சுதேசி உணர்வு, தொழிற்சங்க உணர்வினை ஏற்படுத்த சுதேசி பிரச்சார சபை, தர்ம சங்க நெசவு சாலை தூத்துக்குடி கைத்தொழில் சங்கம், சுதேசிய பண்டக சாலை, வேளாண் சங்கம்” போன்றவற்றை ஏற்படுத்தினார்.

ஆங்கிலேயர்களின் இந்தியாவில் அனைத்து தொழில்களும் அவர்களின் வசமே இருந்தது. இதனை உணர்ந்த சிதம்பரனார், தனது சொத்துக்கள் முழுமையும் விற்று, இந்தியா முழுவதும் 40 ஆயிரம் பங்குதாரர்களை உருவாக்கி சுமார் 10 இலட்சம் மதிப்பில் ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன்’ என்னும் நிறுவனத்தை உருவாக்கினார்.

இதன் தலைவராக வள்ளல் பாண்டித்துரை தேவர் இருந்தார். ஆங்கிலேயர்களின் முக்கிய கப்பல் தடமாக விளங்கிய தூத்துக்குடிக்கும், கொழும்புவுக்கும் இடையே பல்வேறு அச்சுறுத்தல்களை தாண்டி இந்தியாவின் முதல் ‘சுதேசி கப்பலை’ இயக்கினார்.

தூத்துக்குடியில் இருந்து கொழும்புவிற்கு இயங்கிய சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கப்பலில் 4 அணா கட்டணம் மட்டுமே சுதேசி கப்பலில் வசூலிக்கப் பட்டது.

ஆனால் ஆங்கிலக் கம்பெனியோ 4 ரூபாய் வசூலித்தது. மேலும் சரக்கு மூட்டைகளுக்கும், லக்கேஜூக்கும் தனிக்கட்டணமும் வசூலித்தது.

கட்டணம் மிகக் குறைவாக இருந்ததாலும், சுதேசிக் கப்பல் என்ற காரணத்தாலும் மக்கள் கருதியால் சுதேசிக் கப்பலுக்கு மகத்தான ஆதரவளித்தனர். நஷ்டத்தில் மூழ்கிய ஆங்கிலக் கப்பல் தனது கட்டணத்தை 1 ரூபாயாகவும், பின்னர் 4 அணாவாகவும், குறைத்த பிறகும் கூட்டம் வராததால், பிறகு கட்டணமின்றி ஏற்றிச் செல்வதாக அறிவித்தது.

1908 ஆம் ஆண்டு தூத்துக்குடி கோரல் நூற்பாலை ஊழியர்கள் மத்தியில் இவரும், சுப்ரமணிய சிவாவும் பிப்ரவரி 23ஆம் தேதி உரையாற்றினார்கள், இவர்கள் உரைவீச்சின் எழுச்சியாக பிப்ரவரி 27 முதல் இந்த தொழிற்சாலை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர் இவ்வாறு ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பணமாக விளங்கிய வ.உசியினை பழிவாங்க வன்மத்துடன் காத்திருந்தது ஆங்கிலேய அரசு.

இந்த நேரத்தில் விடுதலை போராட்ட வீரர் பிபின் சந்திரபாலின் விடுதலையை கொண்டாட ஆங்கிலேய அரசு தடை விதித்து இருந்தது. அதனை மீறி 09.03.1908ம் தேதியில் தூத்துக்குடியில் சுமார் 20000 மக்கள் கூடிய பொதுக்கூட்டத்தில் வ.உ.சி பேசினார். இதனைத்தொடர்ந்து 12.03.1908 சிதம்பரனார் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

வ.உ.சி. கைது செய்யப்பட்டதை அறிந்தவுடன் மக்கள் கொந்தளித்தனர். திருநெல்வேலியில் கடைகள் அடைக்கப்பட்டன. போக்குவரத்து நிறுத்தப்பட்டது. போராட்டங்களின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியானார்கள்.

இந்த வழக்கில் சிதம்பரனாருக்கு முதலில் 40 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது, நாட்டையே கொந்தளிப்பில் ஆழ்த்திய இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு வலுத்தது, அதன்பின்னர் மேல்முறையீட்டில் தண்டனைக்காலம் 10 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

இளம்வயது முதலே செல்வ செழிப்புடன் வாழ்ந்த சிதம்பரனார் சிறைக்கொட்டடியில் பெரும் துன்பங்களை சந்தித்தார். மாடுகள் இழுக்கும் செக்கினை இவர் இழுத்தார், கல் உடைத்தார், கடுமையான வேலைகளை செய்யவைக்கப்பட்டார், இதனால் சிதம்பரனாரின் உடல்நிலை மிகவும் நலிவுற்றது.

இந்த நிலையில் இலாபத்துடன் இயங்கிய சுதேசி கப்பலை முடக்க 24.07.1908 அன்று நடுக்கடலில் வேறொரு கப்பலில் மோதிய வழக்கை கையில் எடுத்தது. இதனால் சுதேசி கப்பல் நிர்வாகிகள் அச்சமடைந்தனர்.

வ உ சி சிறையில் இருந்த போது சுதேசி கப்பல் நிர்வாகிகள் பயந்து போட்டியை சமாளிக்க முடியவில்லை என்று இரண்டு கப்பலையும் விற்றுவிட்டனர்.

1912 ஆம் ஆண்டு விடுதலை அடைந்தபோது சிதம்பரனாரின் வழக்கறிஞர் உரிமம் பறிக்கப்பட்டது, இதனால் அவரால் வழக்கறிஞர் தொழில் செய்ய இயலவில்லை. சுதேசி கப்பல், தொழிற்சங்க பணிகளுக்காக சொத்துக்களையும், பொருளையும் இழந்துவிட்டதால் வறுமையின் பிடியில் சிக்கினார்.

பிறகு சென்னைக்கு சென்று மண்ணெண்ணெய் வியாபாரம் செய்து தோல்வியடைந்தார், பின்னர் அவருக்கு ஈ.எச்.வாலஸ் என்ற ஆங்கிலேய அதிகாரி வழக்கறிஞர் உரிமத்தை திரும்ப தந்தார், இதன் நன்றி கடனாக தனது கடைசி மகனுக்கு ‘வாலேஸ்வரன்’ என்று பெயர்சூட்டினார்.

தனது இறுதிகாலத்தில் இந்து நேசன், தி நேஷனல் போன்ற பத்திரிகைகளிலும் ஆசிரியராக பணியாற்றினார் சுயசார்புடன் தனது சொத்துக்களை விற்று இந்தியாவுக்கென முதல் சுதேசிக்கப்பலை கட்டிய வ.உ.சி, கடைசிகாலத்தில் வறுமையுடன் உழன்று 1936 நவம்பர் 18 ஆம் தேதி உயிரிழந்தார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மன்னிச்சுடுங்கள் அடுத்தமுறை கப் நமக்கு தான்: தமிழக ஒலிம்பிக் வீராங்கனை உருக்கம்!

Admin

தேர்தல் தேதி நாங்க சொல்லல: பரவும் பொய்யை நம்பாதீங்க – தேர்தல் ஆணையம்

Pamban Mu Prasanth

செந்தூரப்பூவே: இந்த இசை இரட்டையர்களை மறக்கலாமா? – மனோஜ் – கியான்

Pamban Mu Prasanth

‘மு.க.ஸ்டாலின் பரிசளித்த புத்தகம்’ கூகுளில் தேடும் இளைஞர் பட்டாளம்

Admin

மாணவர் காங்கிரஸ், நளினி சிதம்பரத்தின் ஜூனியர், 3 முறை எம்.எல்.ஏ – யார் இந்த விஜயதரணி?

Pamban Mu Prasanth

மனித ரத்தத்திலும் நுழைந்த பிளாஸ்டிக்! – உலகை உலுக்கிய ஆய்வு முடிவு!

மகசூல் – பயணத்தொடர் – பகுதி 9

Pamban Mu Prasanth

கலைஞரின் பொற்கால ஆட்சியின் பொன்னான திட்டங்கள் – ஓர் பார்வை

Admin

கால்டுவெல் தெரியும்… எல்லீஸ் தெரியுமா? விஷம் வைத்து கொல்லப்பட்ட ஐரோப்பிய தமிழறிஞர்

Admin

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்: வரமா? சாபமா?

‘‘அரபு நாட்டை அசத்த வந்துட்டோம்னு சொல்லு’’ : சி எஸ்கே வெளியிட்ட மாஸ்வீடியோ!

Admin

Farmers protest Clash: திட்டம் போட்டுத் தரும் கலெக்டர்… லீக்கான வீடியோ

Admin

Leave a Comment