அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத்தை எதிர்த்து போட்டியிடுவேன் என கூறிய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியை போலீசார் கைது செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.
2022ஆம் ஆண்டு உத்திர பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த அமிதாப் தாக்கூர் என்பவர் யோகி ஆதித்தியநாத்தை எதிர்த்து தேர்தலில் போட்டியிடுவேன் என கூறியுள்ளார்.
இந்நிலையில், அமிதாப் தாக்கூரை போலீசார் தற்கொலை வழக்கு ஒன்றில் தொடர்பு இருப்பதாக கூறி வலுகட்டாயமாக கைது செய்து அழைத்துச் சென்றனர்.
கைதின்போது அமிதாப் தாக்கூரை போலீசார் வாகனத்தில் கட்டாயப்படுத்தி ஏற்றும் வீடியோ காட்சிகளை இணையத்தில் வெளியிட்ட சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ஆளும் கட்சியின் அராஜகத்தை கடுமையாக சாடியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்