நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக சார்பாக வானதி சீனிவாசன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்டார். இறுதியில் வானதி ஸ்ரீனிவாசன் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சேலத்தில் கோவை தெற்கு எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் மகன் சென்ற கார் மேம்பாலத் தடுப்புச் சுவர் மீது மோதியதில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் மகன் ஆதர்ஸ்(வயது 22) நேற்று நள்ளிரவு கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு கார் மூலமாக சென்று கொண்டிருந்தாா்.
அப்போது கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள பட்டர்பிளை மேம்பாலத்தின் வழியாக அதிவேகமாக வந்துபோது, மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீது கார் மோதியது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்து கார் தலைகீழாக கவிழ்ந்து, சிறிது தூரத்துக்கு இழுத்துச் சென்றதால் கார் கடும் சேதமடைந்தது.
இதனையடுத்து அன்னதானப்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஆதர்சை மீட்டனர்.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினர். இதனால் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் விபத்துக்குள்ளாகிய காரை சாலையிலிருந்து அப்புறப்படுத்தினர். அப்போது தகவலறிந்து வந்த பாஜக நிர்வாகிகள் கோவை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினரின் மகன் ஆதர்சை மற்றொரு காரில் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.