தங்கம் வென்றால் கொண்டாட தெரியும்.. ஆனால் அதுக்கு உதவ தெரியாது.. மோடி மீது கடுப்பான பயிற்சியாளர்

SHARE

இந்தியாவின் தங்க மகனாக கொண்டாடப்படும் நீரஜ் சோப்ராவின் பயிற்சியாளர் மத்திய அரசின் மீது சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு குடியரசு தலைவர், பிரதமர் உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும் மத்திய, மாநில அரசுகள், பிசிசிஐ, ஆனந்த் மஹிந்திரா என பல்வேறு தரப்பினரும் பரிசுத்தொகை அறிவித்தனர்.

இதனிடையே நீரஜ் சோப்ரா ஒலிம்பிக்கில் பங்கேற்க அரசு தரப்பில் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என அவரது பயிற்சியாளர் உவே ஹான் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜெர்மனியைச் சேர்ந்தவர் உவே ஹான் கடந்த ஜூன் மாதம் செய்தியாளர்களைச் சந்தித்த போது மத்திய விளையாட்டுத்துறை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அப்போது ஒலிம்பிக்கிற்கான பயிற்சி குறித்து எந்த ஒரு திட்டமும் அரசிடம் இல்லை.விளையாட்டு வீரர்களுக்கு உயர்தர உணவையும் கொடுக்கவில்லை. தமக்கு ஒத்துவராத விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு இந்திய அதிகாரிகள் மிரட்டினர்.

ஆசிய மற்றும் மாமன்வெல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றதால் அவருக்கு JSW நிறுவனம் ஸ்பான்சர் செய்தது. அதுவே நீரஜ் சோப்ரா தங்கம் வெல்ல உதவியுள்ளது எனவும்,உவே ஹான் கூறியுள்ளார்.

ஆனால் இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு எப்படி பிரதமர் மோடியால் வீரர்களுக்கு வாழ்த்து சொல்ல முடிகிறது என பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இந்திய அணி அறிவிப்பு .. வீரர்கள் யார் யார் தெரியுமா?

கப்பு முக்கியம் பிகிலே ..டோக்கியோவிற்கு புறப்பட்ட இந்திய வீரர்களை வாழ்த்தி அனுப்பிய இந்தியா!

Admin

முதல் ஐ.பி.எல். போட்டி: வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி

சே.கஸ்தூரிபாய்

தோனியை தொடர்ந்து உருவாகிறது “கங்குலியின் பயோபிக்” – ரசிகர்கள் உற்சாகம்

Admin

4ஆவது முறையாக கோப்பை… சாதித்த சென்னை சூப்பர் கிங்ஸ்…

இரா.மன்னர் மன்னன்

ஒலிம்பிக்கிலும் இனவெறி தாக்குதல்.. மைதானத்தை விட்டு வெளியேறிய வீரர்கள்!

Admin

மழையால் ரத்தான டிஎன்பிஎல் முதல் ஆட்டம்: ஏமாற்றமடைந்த ரசிகர்கள்

Admin

அப்போது மல்யுத்த வீரன் ..இன்னைக்கு ஈட்டி எறிதலில் தங்க மகன்.. யார் இந்த சுமித் அண்டில்?

Admin

முதல் ஒருநாள் போட்டி: இந்தியா – இலங்கை இன்று மோதல்

Admin

ருதுராஜ், தோனி அபாரம்… 9ஆவது முறையாக பைனலுக்கு தகுதி பெற்றது சி.எஸ்.கே…

இரா.மன்னர் மன்னன்

109 கோல்கள் விளாசிய ரொனால்டோவுக்கு ‘தங்க காலணி’ பரிசு

Admin

சிஎஸ்கே அணியால் இந்திய அணியில் தோனி இணைவதில் சிக்கல் – ரசிகர்கள் ஏமாற்றம்…

Admin

Leave a Comment