இந்த புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் அமுதன் தினத்தந்தியில் தலைமை செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். பத்திரிகை துறையில் 50 ஆண்டுகால அனுபவம் உள்ளவர். இந்த புத்தகம் மட்டும் இல்லாமல் வேறு சில புத்தகங்களும் எழுதியிருக்கிறார். தஞ்சைப் பெரிய கோயிலைப் பற்றிய ‘1000 ஆண்டு கால அதிசயம்’ என்ற இவரது நூல் குறிப்பிடத்தக்கது.
மொத்தம் 38 தலைப்புகள் கொண்ட இந்த புத்தகத்தில் தமிழர்களின் பயணம் மற்றும் பிற இடங்களுக்கு சென்ற தமிழர்கள் தங்கள் வணிகம் மற்றும் சமயத்தை எப்படி நிலை நிறுத்திக் கொண்டார்கள் என்பவை பற்றிய செய்திகள் இருக்கின்றன.
முதல் கட்டுரையான எகிப்து மன்னர்களில் இருந்து தொடங்கி கடைசி கட்டுரையான மெக்சிகோ தென் அமெரிக்க பயணம் வரை ஏராளமான செய்திகளை இதில் ஆசிரியர் சொல்லி இருக்கிறார். இந்த செய்திகளுக்கு ஆதாரமாக குறிப்பு எடுத்த நூல்கள் பற்றியும் சொல்லி இருக்கிறார்.
இதில் எனக்குப் பிடித்த தலைப்புகள் கொரியாவுக்கு தமிழ்நாட்டுக்கும் உள்ள தொடர்பு மற்றும் யவனத்திற்கும் தமிழகத்திற்கும் உள்ள தொடர்பு ஆகியவை. மிகக் குறிப்பாக எரித்ரேயன் என்ற கடல் பகுதிக்கு அந்த பெயர் எப்படி வந்தது என்று என்ற செய்தி கவனம் ஈர்க்கிறது. இது போல நிறைய தகவல்கள் இதில் உள்ளன.
புத்தகத்தின் சில பகுதிகளில் எனக்கு மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும், மொத்தத்தில் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்தான் இது.
வடிவம்: கட்டுரை தொகுப்பு
பதிப்பகம்: அகநி வெளியீடு
பக்கங்கள்: 224
விலை: ரூ 200.
- போஜீ போஜன் (முகநூல் பதிவு)