பிரிட்டன் சுகாதார அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
பிரிட்டன் நாட்டில் டெல்டா வகை கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், பிரிட்டன் நாட்டு சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டனில் கொரோனா ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டால் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
இந்த நிலையில்பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:
பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் நிதியமைச்சர் ரிஷி சுனக் ஆகியோருடன் தொடர்பில் இருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
ஆகவே பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பணியில் இல்லாதபோது தனிமைபடுத்தி கொள்ளவிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்